டைட்டானிக்-வித்யா
பெரும்பாலான இரவுகளில்
இதமான வருடல்களை
உணர்கிறேன்..........!
எண்ணே...அழகானதொரு
காதல் காவியம்...!
உண்மையோ.....
உண்மையின் பின்னணியோ......
கற்பனையோ.......
எதுவாகினும்.......என் இதயத்தில்
புதைந்து விட்ட காதல் பூ.......!
rose ......
jack .......
எல்லா காதல் கதைகளிலும்
காதல் ஜோடிகளாக........!
உப்பு நீரை உற்று
பார்த்துக்கொண்டே இருந்திருந்தாலும்.....
கப்பல் பனிமலையொடு
இல்லறம் நடத்தி இருந்தாலும்
அதன் தாக்கம் இப்படி
இருந்திருக்காது..............!
எத்தனை முறை பார்த்தாலும்
அத்தனை முறையும்
கண்ணீர் துளிக்கின்றது........!
யாரேனும் என் போல்
உணர்ந்ததுண்டா.........?
ஆடம்பரக்கப்பலில்
எளிமையானதொரு காதல்.....
ஏற்றத் தாழ்வில்லாமல்......!
உயிர் பிழைக்க
முதலுதவிக்குமுன்னுரிமை...........
முதல்வகுப்பு பயணிகளுக்கு.....!
மனித உயிர்களின்
மரண ஓலங்கள்.......
தப்பிக்க துப்பாக்கி
முனையில் உயிர்துறக்கும்
கப்பற் தலைவன்........!
பனிப்பாறையை நோக்கி
கப்பல்......
வாழ்க்கையின் கடைசி
நிமிடங்களின் சித்தரிப்பு.......
புல்லரிக்க வைத்தது......!
இரவு இரண்டு மணி.....
ஜாக் எனை இறுக
அணைத்துக்கொள்.......
கப்பல் வேகமாக
மூழ்கிக்கொண்டிருக்கிறது......
i love you jack ......
i love you .........
பிரிவிற்கு முன்னான
பரிதவிப்புகள்.......
முத்தங்கள்
மடைஉடைத்து
புரண்டோடிய காதல் வெள்ளம்........!
அப்பப்பா...... என்ன ஒரு
கணம்...... இந்த நொடியில்
என் இதயம்........!
இறுக பற்றிக்கொள் காதலே
நீர் ஒன்றும் அவ்வளவு
கடுங்குளிராக உனக்கு இல்லை.....
நீ என் இதயத்தில் இருக்கிறாய்.....!
இன்று பிரியும் ஆன்மாக்களில்
எனதும் ஒன்றென்றால்......
என் கண்கள் காணும்
கடைசி காட்சி உன்
திருமுகமே...!
ஜாக்:
துரதிர்ஷ்டமான என்
ஆன்மாவோடு
ஆழம் செல்ல போகிறேன்......!
எனை நினைவில் கொள்.....
என் ஆன்மாவை மிக அருகில் வை....
வார்த்தைகள் சொல்லாத காதல்
ஒருபோதும் மரித்துப்போவதில்லை.....!
உன் மீதான என் காதலும் கூட
அப்படித்தான்.....!
என் நேரம் முடியப்போகிறது
உலகம் நம் காதல் பேசும்......
இந்நிலையிலும் நீ மிக அழகாய்
இருக்கிறாய்..........
உனக்காக என் காதலை
பரிசளிக்கிறேன்............!
i love you rose ........
உன் மீதான என் காதல்
எப்போதும் மாறாது.........!
காதலின் முடிவு.....
கொஞ்சம் கோரமாக இங்கே.......!
ஆண்டிற்கு ஆயிரமாயிரம் படங்கள்
காதல் சொல்ல வந்து போகலாம்...........
காதலில் உருகிக்கொண்டே
உறைந்து போனதொரு கதை
சொல்ல.......
இன்னும் ஆயிரமாயிரம்
ஆண்டுகளாகும்..........!
==================TITANIC ======================
TRUE LOVE NEVER DIES ...........!

