அப்பா
என்
உதட்டோர புன்னகையில்
உன்னதத்தை கண்டதொரு மனம்
பொங்கி வரும் ஆசையை
தாங்கி பூர்த்தி செய்ய பாடுபட்ட மனம்
நான்
தேங்கி நிற்கும் போதெல்லாம்
தாங்கி நின்ற மனம்
தான் பட்ட துன்பம் எதுவும்
நான் பெற கூடாதென ஏங்கும் மனம்
என் தந்தை மனம்
அது
எனக்காக என்றும் துடிக்கும் மனம்
------------அருண்குமார்---------