மை தீட்டி நான் வரைந்த ஓவியம்

என்னென்னமோ எழுதிட எண்ணமே
எண்ணமோ என்னுள் புயலாய்
கரையை கடந்திட ...

காகிதம் நான் எடுத்து
மையில் எழுதிட எத்தனிக்கையில்
பொறு மை இன்றில் தனி மையில்

ஒரு மையற்ற வறு மையை எண்ணி
திற மையற்ற உலகில்
பெண் மையை இறைவன்
மென் மையாய் படைத்ததெண்ணி

மேன் மையை அரு மையாய் வடிக்க
இள மை குடிகொண்டு வெறு மையை
அவள் கரு மையால் சீர மைத்து

மட மை தீர்த்திட கண் மையால்
வரைந்த வள மை கண்டு
பிரம் மை இல்லை பொய் மை
உரைத்திடாத உண் மை
.
நீ படித்திடாத பழ மை
எத்தனை மையென்று...
பல மையால் எழுதியும்
புல மை அன்றில்
அத்துணையும் மெய் பொய்யாய்...

எழுதியவர் : கனகரத்தினம் (31-Mar-14, 11:23 am)
பார்வை : 130

மேலே