தமிழா தமிழா என் இனத் தமிழா

'' தமிழா தமிழா என் இனத் தமிழா //

'' செய்தி வாசிக்கும் பெண்ணை ,
கைதாக்கி சதை தின்று ,
சிதை படுத்தினாய் //

'' உன் காமத்துக்கு எங்கள் சதையை ,
விரிந்தாக்கி தின்று ,
கொன்று, குவித்தாய் //

'' சிங்களவன் உன்னை ,
சிறை பிடிக்காமல் எங்களது ,
சிரம் , கரம் ஓயாது //

'' குருகுலத்தில் பயிலும் ,
மழலையும் விட்டுவைக்க வில்லை ,
குண்டு மலை பொய்தாய் //

'' உதவி புரியும் மருத்துவமனையில் ,
கூட ஆத்திரம் தீராமல் ,
பிரியும் உயிரை சருகாக்கினாய் //

'' உனது எதிரியின் நெஞ்சினில் ,
எத்தனை தோட்டா பாய்ந்தது ,
என்றால் நீ வீரன் - ஆனால் நீ //

'' உன்னிடம் தஞ்சம் புகுந்தவனையும் ,
அவனது விழி கட்டி ,முதுகுப்புறம் ,
பலிக்கிடுத்தாய் நீ வீரனல்ல - அரக்கன் //

'' உனது தோட்டாக்களின் எண்ணிக்கைக்கு ,
யார் ? கட்டவிழ்த்து விட்டார்களோ ,
அந்த துறைக்கு கல்லறை அமைக்கும் நாள் வரும் //

'' சிங்களா நினைவில் வைத்துக்கொள் ,
எனது தமிழ் சொந்தங்கள் உன்னை கருவறுத்து ,
சரித்திரம் படைக்கும் நாள் வரும் //

'' அப்பொழுது எங்களின் அழிவு ,
எப்படி இருந்தது என்பதை ,
நீ அறிவாய் //

'' குமுறி அழுத என் ஈழ ,
குமரிப்பெங்களின் வயிற்றில் - இன்னொரு ,
கரு பிறக்கும் உம்மை கருவறுக்கும் //

'' புரட்சியுடன் உங்கள் சிவகவி ,,/////

எழுதியவர் : சிவகவி (31-Mar-14, 6:44 pm)
பார்வை : 119

மேலே