ஒரு கவிதையின் ஜனனம்
இது ஒரு உண்மை நிகழ்வு.......
1.04.2014...அன்று அதிகாலை 7 மணியளவில் இரவு பணி முடித்து இல்லம் திரும்பும் வேளையில்
உள்ளம் மகிழும் வகையில் நடந்த உண்மை நிகழ்வு...
நான் பணிபுரியும் பணிமனையிலுருந்து வெளியேறும் பேருந்தில் நானும் உடன்
பணிபுரியும் ஊழியர்களும் ஏறினோம்...
பேருந்தின் உட்புறத்தில் பேருந்தை கழுவிய
""நீர் துளிகள்""" அதன் இருக்கைகளில் படர்ந்து இருந்தது.. இதை கண்ட எனது மூத்த பணியாளர் என்னை நோக்கி ஈரத்தை பார்த்துக்கொண்டுஅமரு என்றார்..அதற்கு மறு நண்பர் அவர் கவிஞர் அல்லவா அவர் பார்வையே தனியாக தான் இருக்கும் என்று புகழ்ந்தார்... அந்த மகிழ்ச்சியில் அதே நொடிகளில் அவர் முன் நான் படைத்த விருந்து இதோ.....
"""இதயங்களில் இருக்க வேண்டியது...
. இருக்கைகளிலே இருப்பது
மகிழ்ச்சியான குளிர்ச்சியே...""""
என்றேன் அனைவரும் பாராட்டினர்... எனக்குள் இந்த நல்ல வரிகளை சிந்திக்க வைத்த அந்த நீர்த்துளிகளுக்கும்..நண்பர்களுக்கும் நன்றிகளை சொல்லி கொண்டே விடைபெற்றேன்....