பயணம்
கூட்டமில்லா பேருந்து
ஜன்னல் ஓர இருக்கையில் நான்
தென்றல் காற்று என் மீது மோத
கற்றுக்கொண்டேன் சுவாசித்த காற்றை நேசிக்க !...
இறங்க மனமில்லை பேருந்திலிருந்து
இறங்கி விட்டேன் பேருந்தில் என் மனதை விட்டு !...
அது ஓர் அழகான பயணம் தான் என் வாழ்வில் !...