நீயும் கொடை வள்ளல்தான்

முயன்று வென்றிடு!
முன்னிலை கண்டுடிவாய்!
சோம்பலாய் செயலிழந்து
சோர்வாய் அமர்ந்திருந்து
வாழ்வதனை இழக்காதே!!
எழுந்து நில்!
துணிந்து நில்!
பயந்து குணிந்திடாதே!
தோழ்விக்காய் துவன்றிடாதே!
வெற்றியின் ஆரம்பமது!!
நெஞ்சு உரமிழந்தால்
சறுகும் பயம் காட்டும்
சிறுவன் சண்டியனாவான்
உடல் தளரும்!
உறுதி கொள்! வென்றிடுவாய்!!
தலைமை ஏற்றிடு!
தாரம் பெற்றிடு!
அடிமைப்படு - உன்
குடும்பத்திற்காய்!
குரோதம் மற மற்றவருக்காய்!
தொழிலில் முன்னேறு!
பேராசை மற!
எதிர்ப்பால் நினை
ஏற்றவள் துணையை!
வாழ்வு வளமாகும்!
வாழ்ந்திடு புகழ்ந்திட!!
வென்றிடு வாழ்ந்திட!
கோழை மனம் இகழ்ந்திடு!
கொடுமையது ஏழ்மை!
களைந்திட துணிந்திடு!!
இறைவனை நேசி!
இயற்கை உனைக் கவரும்!
இடர் விட்டகழும்!
இனிப்பாகும் வாழ்க்கை!
இயந்திரம் தோற்கும்!
இயன்றதை உதவிடு!
இயலாதவர் மகிழ்ந்திட!
ஏழ்மையை பயந்திடு!
ஏணியாய் உதவிடு!
நீயும் கொடை வள்ளல்தான்!!
ஜவ்ஹர்