காதல் வலி

முகம் காட்டும் கண்ணாடியிலும்
உனை பார்க்கிறேன்
எனை தொலைத்து நானும்
உனை தேடுகிறேன்
அறிவுக்கு தெரியும் நீ எனை
பார்க்க மாட்டாய் என்று
பாவம் என் இதயம்
விடை தெரிந்த கேள்விக்கு விடை
தேட சொல்கிறது என் கண்களை
அழகாக நடிக்கின்றன என் கண்களும்
உனை கண்டு விட்டேன் என்று
கண்ணீர் விட்டபடி .....

நரி ஒ ஒ

எழுதியவர் : நரி ஒ ஒ (2-Apr-14, 3:11 pm)
சேர்த்தது : நரி ஓ ஒ
Tanglish : kaadhal vali
பார்வை : 250

மேலே