பாஸ்பரசாய் பற்றிக்கொள்ளும்

நகரப் பேருந்தில்
நரகப் பயணம்
பெண்களுக்கு...
இடி அமீன்களின்
இடியில்....
உரசினால் பற்றிக்கொள்ளும்
பாஸ்பரசாய் பெண்கள்
பற்றினால்...எப்படி இருக்கும்...?
உரசியவன் எரியும் தணலில்
பெண்மை குளிர்காயுமே...!
கண்ணகியால் மதுரை எரியுண்டது போல்
கற்புடை மகளிர் கண்ணீர்
பலிக்குமோ?

எழுதியவர் : சித்ரா ராஜ் (2-Apr-14, 7:07 pm)
பார்வை : 87

மேலே