ரங்கநாதன் கவிதைகள் - கொட்டு முரசு
ஊராரோடத் தோப்பு
ஒரு மரம் தான் காப்பு
காவக்காரன் கொறட்டை சத்தம் அண்ணாச்சி - திருடன்
காது ரெண்டு கிழிஞ்சி போயி புண்ணாச்சி
கூடைக்குள்ளே கோழிக் குஞ்சு
குய்யோ முய்யோ கூச்சலு - கண்ணில்
கொடங் கொடமா நீர் வடிஞ்சி
குள்ளநரிக்கு காச்சலு
பஞ்ச லோக சிலை பதிச்ச கோவிலு
அஞ்சு தலை நாகம் அங்கே காவலு
தேனும் பாலும் ஓடுதன்னே பொதுவிலே - சேத்து
தெரு நாயி மிதக்குது அங்கே நடுவிலே
கொடி பறக்குது கோட்டை
கொட்டுமுரசு ஓட்டை - அரசன்
ஆடுராரு விடிய விடிய
அந்தபுறத்துல வேட்டை
........... ஊராரோடத் தோப்பு ......
கவிஞர் நரியனுர் ரங்கு
செல் : 9442090468