வாய்மையே வாழும்
பொய்யர்கள் உலகத்தில்
மெய்யர்கள் வதைபட
சூழ்ச்சியும் துரோகமும்
சூழ்ந்த உலகத்தில் ......
தர்மத்தின் தலைதொங்கி
உண்மைகள் ஊமையாகி
சத்தியம் தோற்று
நீதி நிலைதவறும் நேரத்தில்கூட ......
நடிப்பு நாடகங்கள்
அரங்கேறும் வேளையில்
நல்லவர்களாய் தீயவர்கள்
வேடமிட்டு இருந்தும் .......
ஆழ்கடல் நடுவே ஆழ குழிதோண்டி
வாயை மூடி வாய்மையை புதைத்தும்
மேகம் மறைத்து மிளிரும் ஒளிபோல்
சூரியக்கதிரென சுடர்விடும் வாய்மையே .......
அன்று .......
நல்லவர் யாரென்றும்
தீயவர் யாரென்றும்
உண்மையை உலகிற்கு -
வாய்மை உணர்த்தும் ......
அன்று அழுதவன் சிரிப்பான்
சிரித்தவன் அழுவான்
சத்தியத்திற்கு நேர்ந்த சோதனை நீங்கி
சாக வரம்பெற்று வாய்மை வாழும் ........

