மனப்பால் குடிக்கும் துளிப்பா 1 ---சரோ

புலம் பெயர்ந்தும்
இடம் பெயரவில்லை
கடவுள் !
**************************
மேனியில் மணம்
பூசியும் மணக்கவில்லை
மனம் !
*****************************
அதிகாரம் இல்லாதவனும்
ஆட்சி செய்கிறான்
கற்பனை !
*******************************
தாரைவார்த்த பின்னாலும்
தானாக வளருது
நினைவு !
*********************************
கலை என்று எண்ணி
அங்கீகாரத்துக்கு காத்திருக்கு
கற்பழிப்பு !
சரோ