அருகில்வா அணைக்கவா

மெல்ல மெல்லதான் கிட்டவரவா
சொல்லி சொல்லியே கொஞ்சவரவா
சந்தனமேனியில் சாஞ்சுகொள்ளவா
முத்தான புன்னகையில் சிக்கிவிடவா
முத்தமிடவே நான் சொல்லித்தரவா
மிச்சமின்றியதை அள்ளித்தரவா
பட்டுகன்னதில் பட்டுகொள்ளவா
சங்கு கழுத்தை சுற்றிக்கொள்ளவா
முத்துசரமொன்று தொங்கவிடவா
கொத்துமலரை தொட்டுகொள்ளவா
கோபம்வர மெல்ல விட்டுவிடவா
நெஞ்சமதில் கொஞ்சம் தஞ்சபுகவா
மஞ்சமென்று இங்கு என்னைதரவா
சின்னயிடையினை தொட்டுகொள்ளவா
சின்னவளே என் நல்லவளே நீ வா வா
துள்ளிகுதித்து அள்ளி அணைக்கவா வா

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (3-Apr-14, 6:58 pm)
பார்வை : 72

மேலே