மாணவன்

மண்ணான உருண்டையை
மனிதன் ஒருவன் கண்டெடுத்து
மாளிகைபோல் வீடு கட்டி
மகிழ்ந்தான் ஐயா பல நாட்கள்.....!

பல நாட்கள் சென்றதனால்
படார் என விரிசல் விட
மண்ணான மாளிகையும்
மடார் என்றே சரிந்தனவே .....!

மறுபடியும் முயற்சி செய்து
மாவைப் போல் பிசைந்து -அதை
மயிலைப் போல் வடித்தெடுத்தே-மயிலுக்கேற்ற நிறமூட்டி மாடத்திலே அமரச் செய்தான்......!

மண்ணான பொருட்களையே
மாற்றி மாற்றி வனையும்போது
மணி போன்ற மாணவனை -களி
மண்ணென்று கூறுவானேன் ....!

மகிழ்ச்சியுடனே முயன்றிடுவோம்
மண்ணான மாணவனை
மாணிக்கமாய் மாற்றிடுவோம்
மணி மகுடம் சூட்டிடுவோம்....!

எழுதியவர் : பெ. ஜான்சி ராணி (3-Apr-14, 7:22 pm)
சேர்த்தது : PJANSIRANI
Tanglish : maanavan
பார்வை : 197

மேலே