சொர்க்கம் எங்கே தொடர் அத்தியாயம 15

சொர்க்கம் எங்கே ? தொடர்
அத்தியாயம 15

15.

ஜான லோகம் (ஞானலோகம்) அதற்கு மேல் இருப்பது தபலோகம். அயோனிஜ தேவதாஸ் என்பவர் இங்கு வாழ்கிறார்.

யாரிந்த தேவதாஸ் ? எனக்குத் தெரிந்த தேவதாஸ் டாஸ்மாக் ஆச்சே ! அவரா இங்கு அயோனிஜ தேவதாஸ் என்ற பெயரில் தபம் செய்கிறார் ?

கிங்கரர்கள் இருவரும் ஒரே குரலில், உரக்க, "முட்டாள் மானுடனே ! நீ இவ்வாறு கூறியது மட்டும் சித்ரகுப்தனின் காதுகளை எட்டிவிட்டால் போதும், பாதாள லோகத்திற்கு கீழ் மற்றொரு லோகத்தை ஸ்ரிஷ்ட்டித்து உன்னை அங்கே அனுப்பிவைத்து விடுவார்கள். தெரியுமா" ?

ஐயோ .. ஐயோ .. அபசாரம் .. அபசாரம் .. எங்கு எதைப்பேசுவது என்றே தெரியாமல் வளர்ந்து மடிந்துவிட்டேன்.இன்னும் எனக்குப் புத்தி வரவில்லையே ! என் தவறை நான் உணர்ந்து விட்டேன். மன்னியுங்கள் கிங்கரர்களே !

மானுடா ! மனிதர்கள் சிற்றின்பப் பிரியர்கள். ஆண் பெண் இருவரும் இல்லறத்தில் உடலுறடி கொண்டு இன்பம் பெற்று அவர்களுக்கென சந்ததிகள் பெறுவார்கள். இவர்கள் பிறப்பது யோனியில் இருந்து. எனவே, மனிதர்கள் யோநிஜர்கள் ஆவர். ஆனால் ஞானிகளில் அயோநிஜர்களுமுண்டு. வெவ்வேறு உலகங்களை ஸ்ருஷ்டி செய்த பரம்பொருள் பிரம்மன் அங்கு வாழ்வாதாரங்களை படைப்பதற்கென்று தனது ஞானதிருஷ்டியால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட்வர்களில் அவரும் ஒருவர். அயோநிஜர். ஆசை, ஆணவம், அகந்தை இன்றி தர்மத்தை நிலைநாட்டவே இவர் படைக்கப்பட்டார்.

தபலோகத்திற்கு மேலிருப்பது தான் சத்யலோகம். பிரம்மாவின் உலகம். உண்மையின் உலகம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வேதங்கள் உரைக்கும் வழிநடந்து, நற்செயல்கள் மட்டுமே செய்து இவ்வுலகை வந்து அடையவேண்டு மென்பதே இந்துமதத்தின் கொள்கை. இவ்வுலகை அடைந்தவர்களுக்கு மறுபிறவி என்றுமே இல்லை.

-வளரும் -

எழுதியவர் : (4-Apr-14, 9:05 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 86

மேலே