வழியெங்கும் பிதற்றுபவனின் குரல்
வணக்கம்.
இது எனக்குப் புது முயற்சிதான். மழலையைப் பேசத்
தடுமாறும் குழந்தையின் முயற்சியைப் போல.
ஒருவிதத்தில் பார்த்தால், அதிகப் பிரசங்கித் தனம்
என்று கூடத் தோன்றுகிறது. மிகவும் குறைவாகவே எழுதி இருப்பவன், மிகவும் குறைவாகவே அறியப்பட்டவன், ஒரு நூல் தொகுப்பின் மேல் வைக்கும் விமர்சனம் எத்தனை தூரம் மதிப்பிற்குரியது...என்பதில் எனக்கு ஐயம் இல்லாமலில்லை. இருந்தாலும், வாசிப்பவனின் கருத்துக்களை, எழுதுபவன் எதிர்நோக்கியே இருக்கிறான், அதில் எழும் பாராட்டால், தனக்கான உலகைத் தகவமைத்துக் கொள்கிறான் என்னும்
என் நம்பிக்கைதான் (என் கவிதைகள் குறித்து எனக்கான எதிர்பார்ப்புகள் இதுவாகவே இருப்பதால்) இந்த அதிகப் பிரசங்கித்தனத்தை
ஆவலுடன் செய்யச் சொல்கிறது என் மனதின் இந்தக் கணம். தளம் அறிந்த,
மூத்த, சிறந்த படைப்பாளிகளின் கவிதைகள் குறித்தான என் வாசிப்பின் அனுபவத்தை...
உங்களோடு பகிரும் ஆவலில் "அலகுகளால் செதுக்கிய கூடுகளில்" தன் மூக்கை நுழைத்திருக்கிறான்...
"வழியெங்கும் பிதற்றிப் போகும்" ஒருவன்.
காலத்தின் துணையோடு தொடர்வேன்.