வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 2

"அலகுகளால் செதுக்கிய கூடு"...

எத்தனை அழகான, கவித்துவமான தலைப்பு..
என் நண்பர் ரோஷன். ஏ. ஜிப்ரி-யின் கவிதையின் தலைப்பு. வெளி நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர் அவர். அலகுகளால் செதுக்கப்பட்ட..
தமிழர்களின் வாழ்வுக் கூடுகளைப் பிய்த்தெறிந்துவிட்ட இந்த நூற்றாண்டின் துயரங்களை, தன் இனத்தோடு கவிதைகளின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறவர் அவர். ஒரு பறவையின் முயற்சியைப் போல, பிய்த்தெறியப்பட்ட
கூடுகளைத் தன் அலகுகளால் மீண்டும், மீண்டும் செதுக்கும், (துயரங்களைப் பகிர்ந்த படியும், அவற்றைப் புறம் தள்ளிய படியும்,..அறம் வெல்லும்... அஞ்சற்க...என்ற படி) தன்னாற்றல் படைத்தவர். ஈழத் துயர் தவிர்த்து பொதுவில் பார்த்தாலும்...எல்லோருக்கும் அவரவர் வாழ்வு "அலகுகளால் செதுக்கிய கூடு" தானே. தலைப்பே பெரும் கவிதையாய், வாழ்க்கையாய்...பெரும் துயரமொன்றின் மீளா வெளிப்பாடாய் இருக்கும் ஒரு தலைப்பைத் தாங்கும்... புத்தகத்திற்குள்
நுழைந்திருக்கிறேன்.

இந்தத் தலைப்பைத் தந்தவருக்கு நன்றி சொல்லியபடி மீண்டும் வருவேன்...

காலத்தின் பெரும் துணையோடு.

எழுதியவர் : rameshalam (4-Apr-14, 2:37 pm)
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே