நான் கடவுள்

நானும் கடவுள் என்று
எவனோ சொன்னதை நம்பி
முற்சந்தியில் நிறுத்தி தினமும்
மாலையிட்டு பால்வார்த்து
நெருப்பை முன் வளர்த்து
வரிசையாய் நிற்கிறார்கள்!
ஒருத்தன் வேண்டுவது
அடுத்தவனுக்கு ஆகாது?
ஒவ்வொரு தெருவுக்கும்
காவல் கூடம் அமைத்து
காவற்காரனாய் நினைத்து
கதவை இரவில் பூட்டி
பிச்சைக்காரனும் நாய்களும்
பேச்சுத் துணைக்கு வெளியே !
மனிதா மனதில் விஷமேற்று
கல்லெறிந்து கொல் என்னை
கழுத்தில் சுருக்கேற்று சீக்கிரம்
கருணை காட்டு கொஞ்சம்
இறக்கமுடியாமல் போனது
இறைவனாய் போனதால்
பொறுக்கவில்லை பாழும்
பொய் வாழ்க்கை கலியுகத்தில் !

எழுதியவர் : கர்ச்சாகின் (4-Apr-14, 7:22 pm)
Tanglish : naan kadavul
பார்வை : 84

மேலே