எழுத்துகாம் ஒரு விமர்சனம்
*************** ஊக்குவிப்பு ஊற்றுக்கண் *****************
படைப்பாற்றல் மட்டுமே மனிதர்களை மனிதர்களிடம் இருந்து பிரித்துக் காட்டும் அன்னப்பறவையின் உறிஞ்சுக்குழாய் ஆகும்.
சரிகளிடமிருந்து தவறுகளையும் தவறுகளிடமிருந்து சரிகளையும் நிதர்சனமாய் ஓங்கிக் குரல் கொடுத்து உரக்கக்கூவும் விடியல் காலப் புள்ளினமே படைப்பாளிகள்.கதை என்றும் கவிதை என்றும் நாடகம் என்றும் விடியலுக்கான பன்குரல் முழங்கும் படைப்பாளிகள் பல்கிப் பெருகி வருதல் ஒரு நிலத்தின் பண்பாட்டு நிலைத்தலுக்கு
உதவி செய்யும்.அன்றியும் இப்படிப்பட்ட படைப்பாளிகளை இனங்கண்டறிவது இமாலய முயற்சி என்றாலும் இந்தப் படைப்பாளிகள் முதலில் ஊக்குவிக்கப் பட வேண்டும்.
ஊக்குவிப்பு என்பது ஒரு மாயாஜாலம். யானை மீதேற்றி பட்டும் பட்டமும் பாராட்டு வீதிகளும் அமைப்பதல்ல ஊக்குவிப்பு...படைப்பாளிகளுக்கு முதலில் வாய்ப்புச்சாலை அமைத்தல் வேண்டும்.
இதன் மூலம் மட்டுமே சிதைந்து வரும் கலாச்சார அழிவுகள் குறையும் : பிறமொழிக்கலப்பால் உருமாறும் தாய்மொழி மாண்பு காக்கப்படும்:-இதற்கு ஊக்குவிப்பே சிறந்த காரணி என நாம் படைப்பாளிகளுக்கு அளித்தல் வேண்டும்.
இப்படிப்பட்ட வாய்ப்பை அளிக்கும் ஓர் இணையத்தளமே நமது எழுத்து.காம்.
(தொடரும் )