முயற்சி
அணுவைப் பிளந்ததும் முயற்சியாலே
ஆகாயத்தில் பறப்பதும் முயற்சியாலே
சக்கரம் கண்டதும் முயற்சியாலே
சந்திரனுக்குச் சென்றதும் முயற்சியாலே
முயன்றால் முடியாதது எதுவுமுண்டோ?
முயலாமல் வெல்வது ஏதுமுண்டோ?
முயன்றுபார் வானம் உன் விரல்நுனியில்
சுழலும் வையம்உன் காலடியில்
முயன்றுபார் மரணம்கூட மண்டியிடும்
முயன்றுபார் எறும்பாய்ப் பிறந்தாலும்
ஏணியின்றி இமயத்தில் ஏறிவிடலாம்
முயன்றுபார் என்றும் முயன்றுபார்