நாங்க அப்பவே அப்படி
நீசைவமா அசைவமா சொல்லப்பா
என்றொருவர் என்னிடம் கேட்டார்
நாசமாப் போச்சி என்றார்
நான்சொன்ன பதிலைக் கேட்டு
சொன்னபதில் சொல்லுகிறேன் இங்கும்தான்
திண்ணமாய் உங்களுக்கும் தலைசுற்றும்தான்
நாய்கறி உறிஞ்சும் எலுமிச்சை
சாப்பிட்டதால் அசைவம் ஆனேன்
நல்ல புல் மேய்ந்த ஆடதனை
சாப்பிட்டதால் சைவம் ஆனேன்.