மழை ராத்திரி

ஏழைக்குடிசை
இரவுப்பொழுது...

மழைமுத்துக்கள்
பூமிக்கழுத்தை
அலங்கரிகொண்டிருந்தநேரம்...

சொட்டுச்சொட்டாய்
குடிசைக்குள்ளும் பல
முத்துக்கள் ...

மின்சாரம் பிரயாணம்
செய்யாத குடிசை அது ...

காலம் சப்பிப்போட்ட
சக்கையாய் ஒரு மூதாட்டி ...

நனைந்த குடிசைக்குள்
நனையாத ஒரு நாய்க்குட்டி...

மழை மௌனம் பேச தொடங்கியது ...

குடிசையின் வெளிப்புறத்தில்
நீர்த்துளிகள்
தூக்கிட்டுக்கொண்டிருந்தன ...

ஒற்றை அகல் விளக்கு
நடனம் செய்திருந்தது ...

கிழவி கூவினாள்....

ஏய் மணி , இங்க வந்து படு..

காதுகளை உயர்த்தி
அருகே வந்தது நாய்க்குட்டி...

சாப்பிட இப்ப ஒன்னு இல்ல ..
தண்ணியக்கொஞ்சம் குடி..

'தாகத்தோட'ஒரு பார்வை..
கண் மூடி சாய்ந்தது ...நாய்க்குட்டி


ஏக்கத்தோடு க நிலவன்

எழுதியவர் : க நிலவன் (5-Apr-14, 3:05 pm)
Tanglish : mazhai raathri
பார்வை : 91

மேலே