சுட்டிக் குழந்தைகளுக்கு

கொஞ்சிச் சிரிக்கும் மழலைச் சிரிப்பும்
பிஞ்சு மனதோடு ஆடி விளையாடும்
காண்போரை எல்லாம் மகிழச் செய்யும்
சின்னஞ் சிறு குயிலே
உயிர்கள் வாழும் இவ்வுலகில்
நீ இல்லையென்றால் அர்த்தமில்லையே
தேடித் தருவாயா ?
உன்னைப் போற்றும் வார்த்தைகளை
உனக்காக ஒரு தினம்
அது என் உயிர்ப்பூ மலரும் தினம்
அதுவே குழந்தைகள் தினம்
தன்னலம் மறந்து பிறர்நலம் பிறக்க
போராடிய நேருவை
உன் தெய்வ மொழியில்
அழகு மழலையில்
''நேரு மாமா '' என்றழைத்தாய் நீ
அழகே !
நீ தோட்டத்தில் பூத்த மலரா ?
அல்லது என் கமுன் தோன்றும் கடவுளா ?
மறந்துவிடு போனதை
வாழ்ந்துவிடு இருப்பதை
கனாக் காணு வருவதை
என்று சொல்லாமல் உணர்த்துவது குழந்தை .