வாழ்த்து

யுகம் யுகமாய் நகர்கிறது
இன்றைய நாள் ...
நாளை உன் பிறந்த நாள்
மனதில் மட்டும் ஏனோ
ஓர் கனம்;

எப்போதும் உன் தூக்கம் கலைத்து
வாழ்த்து சொல்வேன்
இப்போதோ........
கல்லூரி விடுதியில் நீ
வீட்டில்.....
வாழ்த்த முடியாமல் நான்

வருத்தம் மட்டும்
நெஞ்சுக்குள் மிச்சமாய்......

வாழ்த்துக் கூற முடியவில்லை
வாழ்த்தி எழுதுகிறேன்
என் அண்ணனுக்கு
"பிறந்த நாள் வாழ்த்துக்கள்"......

எழுதியவர் : அரிதா (ர. மெர்சி நான்சி ) (5-Apr-14, 1:53 pm)
Tanglish : vaazthu
பார்வை : 1573

மேலே