ரமெர்ஸி நான்சி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரமெர்ஸி நான்சி |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 17-Mar-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 410 |
புள்ளி | : 23 |
ஏழு கழுதை வயதானது என்று
அடிக்கடி திட்டிச் செல்வாள்
போதும் என்று சொன்னால் போதும்
அருகே அமர்ந்து ஊட்டி விடுவாள்............
வேலைக்கு போய் அம்மா, தங்கைக்கு
தங்கத்தில் போடலாமே என்பார் அண்ணனிடம்
வேலை வந்து சென்றதும் சொல்வார்,
அவ்வளவு தூரம் வேண்டாம் என்று.........
சண்டை மூட்டிச் செல்வான் சகுனியாய்
மூட்டியதும் நகைப்பான் கண்ணனாய்
பின்னர் அளிப்பான் சமாதானம் அமைதியாய்
ஒருசிறு கள்ளச் சிரிப்புடன்.......................
இந்த பாழாய் போன கோபம்
அடிக்கடி வருகிறது
வேரவரேனும் உன்னிடம் பேசிச் சென்றால்.....
கொடி கம்பாய் நான் வேண்டும்
என்மேல் படரும் கொடியாய்
நீ வேண்டும்....
மெல்லிய இலையாய் நான் வேண்டும்
என்னை உரசும் காற்றாய்
நீ வேண்டும்....
ஜன்னல் கம்பியாய் நான் வேண்டும்
என்வழி செல்லும் தென்றலாய்
நீ வேண்டும்....
கட்டில் படுக்கையாய் நான் வே0ண்டும்
என்மேல் மெத்தை விரிப்பாய்
நீ வேண்டும்....
மெத்தை படுக்கையில் நான் வேண்டும்
என்மேனி தொடும் போர்வையாய்
நீ வேண்டும்....
உள்ளிருக்கும் உதிரமாய் நான் வேண்டும்
எனை சுற்றிய உடலாய்
நீ வேண்டும்....
பெண்ணாக நான் வேண்டும் மென்மையாய்
என்மேல் படரும் ஆணாக
நீ வேண்டும்....
என் காலை விடியலில்
உன் சோம்பல் முறிவு வேண்டும்
என் ஈர முடியால்
உன் முகம் தீண்ட வேண்டும்
உன்னை எழுப்பும் வேளையில்
உன் மேல் நான் வேண்டும்
உன்மேல் நானானால் மீண்டும்
ஒரு குளியல் வேண்டும்
உன் ஆடைகள் நம்
போர்வையாய் மாறிட வேண்டும்
நெடு நேர குளியலில்
உன்னுடன் நான் வேண்டும்
என் தலை துவட்டும் வேளையில்
காதருகே உன் முகம் வேண்டும்
என் காலை நேர உணவில்
உன் இரு உதடுகள் வேண்டும்....
என் ஒவ்வொவொரு அசைவிலும் அன்பே
என்றென்றும் நீ வேண்டும்...
என் காலை விடியலில்
உன் சோம்பல் முறிவு வேண்டும்
என் ஈர முடியால்
உன் முகம் தீண்ட வேண்டும்
உன்னை எழுப்பும் வேளையில்
உன் மேல் நான் வேண்டும்
உன்மேல் நானானால் மீண்டும்
ஒரு குளியல் வேண்டும்
உன் ஆடைகள் நம்
போர்வையாய் மாறிட வேண்டும்
நெடு நேர குளியலில்
உன்னுடன் நான் வேண்டும்
என் தலை துவட்டும் வேளையில்
காதருகே உன் முகம் வேண்டும்
என் காலை நேர உணவில்
உன் இரு உதடுகள் வேண்டும்....
என் ஒவ்வொவொரு அசைவிலும் அன்பே
என்றென்றும் நீ வேண்டும்...
கொடி கம்பாய் நான் வேண்டும்
என்மேல் படரும் கொடியாய்
நீ வேண்டும்....
மெல்லிய இலையாய் நான் வேண்டும்
என்னை உரசும் காற்றாய்
நீ வேண்டும்....
ஜன்னல் கம்பியாய் நான் வேண்டும்
என்வழி செல்லும் தென்றலாய்
நீ வேண்டும்....
கட்டில் படுக்கையாய் நான் வே0ண்டும்
என்மேல் மெத்தை விரிப்பாய்
நீ வேண்டும்....
மெத்தை படுக்கையில் நான் வேண்டும்
என்மேனி தொடும் போர்வையாய்
நீ வேண்டும்....
உள்ளிருக்கும் உதிரமாய் நான் வேண்டும்
எனை சுற்றிய உடலாய்
நீ வேண்டும்....
பெண்ணாக நான் வேண்டும் மென்மையாய்
என்மேல் படரும் ஆணாக
நீ வேண்டும்....
உன்னிடத்தில்
நான்
மறைத்த என் காதலை
கூறிவிட்டாள்
என் தோழி.....
அவள் காதலிப்பதாக.........
முகம் கழுவிய நானோ
என் கண்களை மறந்துவிட்டேன் போலும் ......
அதனால் தான் என்னவோ
தன்னை தானே கழுவிகொண்டது
-
-
-
-
-
தேங்கி நின்ற என் கண்ணீர் துளிகளால்...................