என் வீடு

ஏழு கழுதை வயதானது என்று
அடிக்கடி திட்டிச் செல்வாள்
போதும் என்று சொன்னால் போதும்
அருகே அமர்ந்து ஊட்டி விடுவாள்............

வேலைக்கு போய் அம்மா, தங்கைக்கு
தங்கத்தில் போடலாமே என்பார் அண்ணனிடம்
வேலை வந்து சென்றதும் சொல்வார்,
அவ்வளவு தூரம் வேண்டாம் என்று.........

சண்டை மூட்டிச் செல்வான் சகுனியாய்
மூட்டியதும் நகைப்பான் கண்ணனாய்
பின்னர் அளிப்பான் சமாதானம் அமைதியாய்
ஒருசிறு கள்ளச் சிரிப்புடன்.......................

எழுதியவர் : மெர்சி நான்சி . ர (13-May-18, 11:22 am)
சேர்த்தது : ரமெர்ஸி நான்சி
Tanglish : en veedu
பார்வை : 2179

மேலே