ஈர உதவி

ஈர உதவி

என் உதட்டில் ஈரமாய் நீ ஊறு
இதழைக் கவ்வித் தேனாய் ஊறு
என் கணினியில் கவிதை ஊறு
என் மேனியில் உனதால் ஊறு!
வாலிபத்துக்கு வக்காளத்து வாங்கு
என் மூச்சே உன் மூச்சாய் வாங்கு
பேச்சால் தேனோடு பகை வாங்கு
நம் காதலுக்குத் தனிப் பெயர் வாங்கு!
உன் உடலில் ஆசை பதுக்கி வை
துருவித் துருவி என்னைத் தேட வை.
உயிரோடு உயிரைச் சேர்த்து வை
உலகமே நம் காதல் வியக்க வை!
ஒருவருக்கொருவரை எழுதித் தந்து
உள்ளத்துக்குள் முழுக்க நுழைந்து
காதலை வாழ்வாய் மொழிபெயர்த்து
கொண்டாட்டமென நம் காதலுக்கு
இன்னொரு பெயரிட்டு வாழ்வோம்!

எழுதியவர் : திருத்தக்கன் (13-May-18, 12:21 pm)
சேர்த்தது : திருத்தக்கன்
Tanglish : eera uthavi
பார்வை : 79

மேலே