சிங்கம் அழித்து ஆடு
சிங்கம் அழித்து ஆடு
தங்க நகை அழித்து இன்னொரு
தங்க நகைதானே செய்வார்கள்/
எனக்குள் இருந்த சிங்கத்தை
அழித்து நீ ஆடு செய்துவிட்டாயே!
உன் பின்னோடுவேன் என்றுதானே?
சிங்கமாய் விட்டிருந்தாயானால்
நாம் சேர்ந்து சென்றிருக்கலாம்-
பின் முன் என்று குழப்பிவிட்டாயே?
ஒன்று சொல்கிறேன்-கேட்கிறாயா?
இந்த ஆட்டுக்குள் இன்னமும் கூட
சிங்கம் செய்யப் பொருள் உள்ளது.
ஆட்டு மூளைக்கும் அது புரிகிறது.
மீண்டும் சிங்கப்பட்டு வருவேன்-
அப்போது ஆடு தேடிப் போவாயா?
என்னோடு சிங்க வாழ்வா? யோசி!!!