மரத்தின் ஆசை

உன் வீட்டு தோட்டத்தில் மரமாக ஆசைப்படுகிறேன் - ஏனெனில்
என் கிளைகளில் உனக்கு ஊஞ்சல் கட்டுவதற்காக
என் சுவையான பழங்களை நீ ருசிப்பதற்காக
என் தென்றல் காற்றினால் இரவில் உன்னை தாலாட்டுவதற்காக
என் வண்ணப்பூக்களினால் எப்பொழுதும் உன் கூந்தலை அலங்கரிப்பதற்காக
என் மரநிழலினால் உன்னை எப்பொழுதும் குடையாக காப்பதற்காக
உன் வீட்டு தோட்டத்தில் ஒரு விதையாய் வித்தைப்பாயா பெண்ணே !!!

எழுதியவர் : M Chermalatha (13-May-18, 1:11 pm)
Tanglish : maratthin aasai
பார்வை : 103

மேலே