சுதந்திரம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுதந்திரம்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  15-Aug-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Feb-2013
பார்த்தவர்கள்:  560
புள்ளி:  66

என்னைப் பற்றி...

எட்டாவது வரை படித்து விட்டு வாகன தொழிற்சாலையில் வேலை செய்யும் சாதாரண மனிதன் தொர்புக்கு sudhan15@gmail.com
தொலையலை பேசி 9791876813

என் படைப்புகள்
சுதந்திரம் செய்திகள்
சுதந்திரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2015 8:25 am

ஒரு காதல் இறந்து விட்டது ..
இளைப்பாற மடி தேடிய..
தலை கோத விரல்கள் தேடிய ..
உச்சி முகர்ந்து நெற்றியில்..
கன்ன கதுப்புகளில்..
ஒத்தடமாய் உதடு தேடிய...
ஆதரவான.. ஆறுதலான.. வார்த்தைகள் தேடிய..
ஒரு காதல் இறந்து விட்டது..
அது இயற்கை எய்தவில்லை..
அகாலம் அடைந்து விட்டது..
சுபமுகூர்த்த சுபதினத்தில் பெரியோர்களால்
நிச்சயிக்கப்பட்ட அகாலம்...அது
காதல் பிணத்தை மனதிலே புதைத்து..
கதறி அழ கன நேரமும் தனித்திறாத அந்தநாள்..
சிரிக்க சொல்லி சீன்டிய சுற்றத்திற்க்கும் சூழத்திற்க்கும் தெரியுமா என் காதலின் மரணம்..காதலியை மணந்தேன் காதலை இழந்தேன்..

மேலும்

சுதந்திரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2014 2:48 pm

ஈரம் இல்லா இதயங்கள் பார்த்து
இமயமும் வறண்டு போகலாம்
மனிதம் இல்லா மனிதர் பார்த்து
மழையும் பொய்த்தது போல்

மேலும்

உண்மை தான்! நன்று 15-Apr-2014 3:13 pm
சுதந்திரம் - ரம்யா எம் ஆனந்த் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2014 10:16 am

கைபேசியும் கணினியும் இல்ல உலகம் எப்படி இருக்கும் ? இவை இரண்டையும் பிரிந்து வாழ்வது இனி சாத்தியமா? இவை இரண்டும் நம் வாழ்வில் எந்த அளவுக்கு முக்கியம்?

மேலும்

இனிய இயற்கையான சூழல் திரும்பும் ....... ஏனெனில் நம்மை விட சிறப்பாக வாழ்ந்து இருப்பார்கள்... 14-Feb-2014 2:30 pm
1970 -உக்கு முன் இரண்டும் இல்லை. அப்போது மனிதர்கள் வாழ வில்லையா? இப்போதைவிட நன்றாக வாழ்ந்தார்கள் - அன்போடும், பண்போடும். காந்தி, கைப்பேசியும் கணினியும் வைத்தா சாதித்தார்? கம்பனிடம் அவை இருந்தனவா? காவியம் படைக்கவில்லையா? எதுவுமே வேண்டும் என்றால்தான் வேண்டும்; வேண்டாம் என்றால் தேவையில்லை! இன்னமும் வேப்பங்குச்சியால் பல் துலக்குபவர்கள், தலைக்குச் சீயக்காய்த் தேய்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கைப்பேசியைக் பேசவும், கணினியைத் தெரியாத விவரங்கள் தெரிய மட்டும் பயன்படுத்தினால் போதும். எப்போதும் நோண்ட வேண்டாம்...உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!... 11-Feb-2014 12:27 am
அன்பிற்கினியவர்களுக்கு இடையேயான தூரம்(தொலைவு) விளங்கும். 10-Feb-2014 10:02 pm
நிச்சயமாக இதை விட சிறப்பாக வாழ்ந்து இருப்பார்கள்..! எப்படி என்றால் நமது முன்னோர்கள் அப்படி வாழ்ந்தவர்கள்தான்..! 10-Feb-2014 9:16 pm
சுதந்திரம் - தமிழச்சி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2014 12:23 pm

ஒரு சினிமா பிரபலம் இஸ்லாத்தை தழுவியது குறித்து பெரியளவில் தூக்கிப்பிடித்துக் கொண்டாடும் சில இஸ்லாமியர்கள் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் ?

சினிமா என்பது பெரும்பாலும் இஸ்லாமிய மார்க்க விதிகளைத் தகர்த்து வீறு நடைப்போடும் ஒரு வர்த்தகம். அப்படி இருக்க ஒரு சினிமா பிரபலத்தின் மதம் விட்டு மதம் தாவும் செய்கையானது எந்த விதத்தில் இஸ்லாத்தை பெருமைப்படுத்தும் ?

சினிமாவை எந்த விதத்தில் இஸ்லாம் ஆதரிக்கிறது ?

(இது ஒரு கேள்வி மாத்திரமே...தெளிவு படுத்தும் நோக்கில் மட்டும் உங்களது பதிலகள் இருக்கட்டும் !)

மேலும்

மதங்கள் என்று வர வேண்டியது தவறுதலாக மாதங்கள் என்று வந்து விட்டது. மதங்கள் என்று திருத்தி வாசிக்கவும். நன்றி. 13-Feb-2014 3:12 pm
மாதங்கள் மனிதன் வகுத்துக்கொண்ட பாதை. யார் எந்தப்பாதையில் போவது என்பது அவனவன் விருப்பம் மதங்களின் சங்கமம் கடவுள் என்றால் கலவரங்கள் எதற்கு, போட்டிகள் எதற்கு, பிரச்சாரங்கள் எதற்கு. கடவுள் வந்து சொன்னதில்லை நான் இந்த மதம் தான் என்று, எந்த மனிதனும் கண்டதில்லை கடவுள் இப்படித்தான் என்று. கடவுளும் சரி , மதங்களும் சரி வாழ்க்கையில் ஒரு அங்கமே தவிர அதுவே வாழ்க்கை அல்ல. கடவுளும் இல்லை மதங்களும் வேண்டாம் என்று வாழ்பவர்களும் சிறப்பாகத்தான் இருக்கிறார்கள். கடவுளை நம்பி சிறப்புக் கெட்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். மனித நேயத்தை மறந்த கடவுளும் சரி, மதங்களும் சரி அவற்றைக் கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. என்பது என் தனிப்பட்ட கருத்து. 13-Feb-2014 3:06 pm
அருமையான விளக்கம் தோழி 13-Feb-2014 10:24 am
தோழமையே வணக்கம்... இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா மட்டுமல்ல. இன்னும் பலரும் குறிப்பாக உலகப் பிரபலங்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளார்கள். அது அவரவர் விருப்பம். அதில் தலையிட நமக்கு உரிமையில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உலகப் புகழ்பெற்ற பிரபலங்கள் இஸ்லாத்தில் இணைந்தோர்களின் பட்டியல்கள் இதோ... டாக்டர் உமர் ரோல்ஃப் பாரன் எஹ்ரென்ஃபில்ஸ் - ஆஸ்திரியாவைச் சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். அல்ஹாஜ் டாக்டர் அப்துல் கரீம் ஜெர்மானஸ் - ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த அறிஞர். ஆர். எல். மெல்லமா - லெய்டன் பல்கலைக்கழகம் மானுடவியலாளர், எழுத்தாளர், அறிஞர். அல்ஹாஜ் லார்ட் ஹெட்லீ அல்ஃபாரூக் - அரசியல் வல்லுனர் பிரிட்டன். முஹம்மது அஸது - இவரது பழைய பெயர் லெபால்டு வெய்ஸ் பத்திரிக்கையாளர், நூலாசிரியர். ஸர் அப்துல்லாஹ் ஆர்க்கிபால்டு ஹாமில்ட்டன் - ராயல் டிபென்ஸ் கார்ப்பரேஷனில் லெப்ட்டினன்ட்டாகவும், செல்ஸி கன்சர்வேட்டிவ் அசோசியஷனின் தலைவராகவும் இருந்தவர். முஹம்மது அலெக்சாண்டர் ரஸ்ஸல் வெப் - நியூயார்க் சிறுகதை எழுத்தாளர், பத்திரிக்கையாளர். ஸர் ஜலாலுத்தீன் லாடெர் ப்ரன்ட்டன் - ஆங்கிலேயர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். முஹம்மது அமான் ஹொபோஹ்ம் - ஜெர்மன், சமூக சேவகர். பேராசிரியர் ஹாரூன் முஸ்தஃபா லியான் - ப்ரிட்டன், புவியியல் வல்லுநர். டாக்டர் அலீ சல்மான் பெனோயிஸ்ட் - பிரெஞ்சு மருத்துவர். பசீர் பிக்கார்டு - ஆங்கிலேய கவிஞர், நாவலாசிரியர், நூலாசிரியர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம். டாக்டர் ஹமீது மார்கஸ் - ஜெர்மன், மொழிப்பெயர்ப்பாளர். மேவிஸ் பி. ஜாலி - பிரிட்டன், ஆராய்ச்சியாளர். லேடி எவ்லின் ஜெய்னப் கோபால்டு - பிரிட்டன். சிசிலியா மஹ்மூதா கனோலி - ஆஸ்திரியா, தீவிர கிறிஸ்தவ மதப் பிரியராக இருந்தவர். பாத்திமா கசூயி - ஜப்பான். ஆமீனா மோஸ்லர் - ஜெர்மனி. முஹம்மது ஜான் வெப்ஸ்ட்டர் - லண்டன், இஸ்மாயீல் வீஸ்லா ஸெஜீர்ஸ்கி - போலந்து. அப்துல்லாஹ் பேட்டர்ஸ்பி - கிழக்கு மத்திய ஆப்பிரிக்கா. மால்கம் எக்ஸ் - கருப்பின மக்களுக்காக போராடிய அமெரிக்கர். முஹம்மது அலீ - உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர். மாலீக் டைசன் - குத்துச் சண்டை வீரர். கரீம் அப்துல் ஜப்பார் - உலகப் புகழ் பெற்ற கூடைப் பந்தாட்ட வீரர். யூசுப் இஸ்லாம் - ப்ரிட்டிஷ் பாப் பாடகர். மர்மட் ஜமீலா - லண்டன். யூத அமெரிக்க எழுத்தாளர், கவிஞர். அப்துல்லா இப்னு புகைனா - இசைக்கலைஞர் அமெரிக்கா. ஜாக்ஸ் காஸியோ - ஆராய்ச்சியாளர். கமலாதாஸ் - பிரபல மலையாள எழுத்தாளர். ஏ. ஆர். ரஹ்மான் - இசையமைப்பாளர், இந்தியா. இரண்டு முறை ஆஸ்க்கர் விருதை வென்றவர். சூசய், சாகர் சந்த் என பட்டியல் நீள்கிறது. இந்த பட்டியலை இங்கு ஏன் நான் சமர்ப்பித்தேன் என்றால் யுவன் மட்டுமல்ல உலகப் பிரபலங்கள் பலரும் இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். காரணம் அந்த மார்க்கத்தின் ஓரிறைக் கொள்கை. இது அவரவர் விருப்பம். மேலும் தகவல் தேவைப்பட்டால் தொடரலாம். நன்றி நன்றி. 13-Feb-2014 9:44 am
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Feb-2014 11:23 am

செல்வம் வேண்டும் செல்வம் வேண்டும்
என் சந்ததிக்காய் அதை கொடுக்க வேண்டும்
செலவிற்கு காசு பணம் கொடுக்க வேண்டாம்
நீர் கற்றறிந்த கல்வியினை கற்றுத்தாரும்...

செழிக்க வேண்டும் செழிக்க வேண்டும்
என் சமுதாயம் என்றுமே செழித்திடல் வேண்டும்
அணிவதற்கு வேட்டி சட்டை கொடுக்க வேண்டாம்
மானம் காக்க கல்வியினை கற்றுத்தாரும்...

ஒளி ஏற்ற வேண்டும் ஏற்ற வேண்டும்
என் சமூகம் அதிலே ஒளிரவும் வேண்டும்
ஒளிக்காக மின் விளக்கு கொடுக்க வேண்டாம்
வாழ்வு பிரகாசிக்க கல்வியினை கற்றுத்தாரும்...

பெற்று விட்டோம் பெற்று விட்டோம்
எளியோர் பட்டந்தனை பெற்றும் விட்டோம்
ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டாம்
ஏழைக்கும

மேலும்

வரும் ஐயா மக்கள் விழிப்புணர்வில் உள்ளது... அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும் கல்வி செழிப்பை நல்கும் என அனைவருக்கும் கல்வி உரிமை உண்டு என்று உணர வேண்டும் 6 வயது முதல 14 வயது வரை கட்டாய கல்வி என சட்டம் மட்டுமே சொல்கிறது... நாம் கடைபிடிக்கவில்லை... 10-Nov-2014 12:51 pm
மிக அருமையான சிந்தனைகள்..சில வரிகளிலேயே..கல்வி இன்று கடைக் கோடி மக்களுக்கும் ஒரே தரத்தில் வழங்கிட வியாபார சிந்தனை இதில் இல்லாத நிலை வருமா என்ற ஏக்கமே வளர்கிறது.. 10-Nov-2014 12:46 pm
:) 10-Nov-2014 12:22 pm
நன்றி தோழமையே :) 03-Sep-2014 1:20 pm
சுதந்திரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2014 2:25 pm

அப்போ எங்களுடைய ஜாகை ரயில்வே வீட்டில் ஸ்டேஷனுக்கு மேலே உள்ள மாடியில். அந்தக்கால மோஸ்த்தரில் ஜன்னல் அதற்கேற்ற கண்ணாடிக்கதவுக ளும்,எத்தனை டிகிரி சூடேற்றினாலும் இளகாத இரும்புக் கொண்டிகளையும் கொண் டது. இழுத்து ஜன்னல் கதவைச் சார்த்துவது என்பது, அத்தனை சுளுவில் நடந்துவிடாது. அந்தக் கண்ணாடிக்கதவுகளூடே ரயில் செல்வதைப் பார்க்கப் பிடிக்கும். சத்தம் ஏதும் கேட் காமல் அதிர்வோடு கூடிய ரயில் ஊர்ந்துசெல்வது தெளிவாகத் தெரியும்.
வீட்டிற்கு விட்டம் என்பது மூன்று ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருக்கும், அந்த உயரத்திலிருந்து இரு பக்க சுவர்களை இணைக்க தண்டவாளங்களை வைத்து ‘கர்டர்’ போட்டிருப்பார்கள். அந்தக் ’கர்டர்

மேலும்

சிறப்பு . 06-Feb-2014 3:51 pm
veeramani venkat அளித்த கேள்வியில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Feb-2014 12:30 pm

நாம் பெண்களை , பெண்மையை ஏன் போற்றுவது இல்லை, பெண்களை சக மனுஷியாக நினைப்பபது இல்லை, இன்றைய சமூக சூழலில் இது ஒரு சமூக அநீதிதானே ?

மேலும்

ஐயா, நாம் பாதியாகத்தான் மதிக்கிறோம்; அவர்களில் சிலர் பாதிக்கும் மேலும் நடந்து கொள்கிறார்கள். நல்ல கேள்வி கேட்டீர்கள் 2014 - இல் வந்து. கனவுலகிலிருந்து விழியுங்கள். 08-Feb-2014 7:48 am
உங்கள் கருத்திலேயே பெண்களை தாழ்த்தி பேசுகிறீர்கள் "பெரிதும் மதிப்பவன் எப்படி எனில் தாயாக , சகோதரியாக , குழந்தையாக இன்னும் ஒருபடி மேலாக என்னில் பாதியாக " என்று சொன்னால் நீங்கள் தான் இன்னம் உங்களுக்கு இணையாக பெண்ணை பாக்கும் மனப்பாங்கு அற்றவராக தோன்றுகிறது..... அவ்வாறாயின் தாயாக , சகோதரியாக , குழந்தையாக இருக்கும் பெண்கள் உங்களில் தாழ்ந்தவரா ? 07-Feb-2014 3:19 am
சகோ. . . தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.கண்ணாடி விற்றவன் தன்முகம் மட்டுமே தெரிய வேண்டும் என்று கண்ணாடி படைப்பதில்லை.யார் பார்க்கிறார்களோ அவர் முகம் தெரிய வேண்டும் என்பது நியதி.மாற்றுக் கருத்துகள் வரவில்லை. உங்கள் கேள்வி இப்போதய சூழ்நிலையில் தேவையா என்பதுதான் இங்கே பதில் கூறியவர்களின் ஆதங்கமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. பல கேள்விகளுக்கு நான் பநில் அளித்துள்ளேன்.நானும் சில கேள்விகளும் கேட்டு உள்ளேன்.ஆனால் நீங்கள் சொன்ன நிபந்தனை உங்களுக்கே சரியாகப் படுகிறதா என மனசாட்சி தொட்டு சொல்லுங்கள்.பெண்களை போகப் பொருள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.நீங்கள் எந்த அர்தத்தில் அப்படி குறிப்பிட்டீர்கள்.சொறிந்து விட்டு பாதியில் விட்ட கதை போல் அல்லவா உங்கள் கேள்விக்கு ஆமாம் சாமி போடாதவர் நிலை ஆகிறது. நீங்கள் கணவன்தான் போகப் பொருள் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது எங்கள் சிந்தனை கூறுகிறது.வேறு அர்த்தத்தில் நீங்கள் குறிப்பிடவும் முடியாது.கூடாது.கணவன் என்றாலும் சரி இல்லை என்றால் விவாகரத்து செய்து மறுமனம் செய்யும் அளவுக்கு பெண்கள் வளர்ந்து தன்னம்பிக்கை கொள்ளும் காலம் இது. அதற்கு இன்னும் ஒரு ஆண்மகன்தான் மனமுவந்து உதவுகிறான். ஒரு கேள்வியை கேட்டீர்கள் சரி.அதற்கு விடையும் உங்களுக்கு தெரிந்து இருந்தால் அந்த கேள்வியே தேவை இல்லையே.கருத்து எப்படி வரினும் நீங்கள் ஒருவர்தான் பெண்ணியத்தின் பிரதிநிதி போலவும் உங்கள் கேள்வக்கு உங்களை பின் பற்றாதவர்கள் எல்லாம் நீங்கள் நினைத்த கருத்துக்கு எதிரி மட்டமல்ல. பெண் இனத்துக்கே எதிரி போல நீங்கள் சித்தரிக்க முயல்வது. இப்போதும் நான் ஏற்கனவே உஙகள் கேள்வி சம்பந்தமாக எத்தனை பதில் கூறி இருந்தேனோ . . அத்தறையும் மீண்டும் தளத்தில் நான் உறுதி பட கூறுகிறேன்.நான் பெண்களுக்கு எதிரி என்றால் 5,2,14 அன்று நான் சமர்ப்பித்த இது வேண்டுமோ இனி நமக்கு.என்ற கவிதையை படித்தும் கருத்து சொல்லட்டும். போதும் சகோ. நாம் ஏதோ பெண்களை வைத்து காமடி பண்ணுவது போல் உள்ளது.இதைத்தான் இந்த பதில்களிலேயே இன்னொரு சகோ இந்த கேள்வியே தேவை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். நன்றி. 07-Feb-2014 1:21 am
போங்கள் நிலா . நீங்கள் பாட்டுக்கு நியாயம் என்று சொல்லி விட்டீர்கள். மீண்டும் இந்த கேள்வி கேள்வியின் அனைத்து பதிலையும் நேரம் இருக்கும் போது படியுங்கள். 07-Feb-2014 12:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (36)

user photo

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
தோழமையுடன் ஹனாப்

தோழமையுடன் ஹனாப்

இலங்கை - சாய்ந்தமருது

இவர் பின்தொடர்பவர்கள் (36)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
priyababy

priyababy

erode
user photo

S.Ashok Kumar

Dindigul

இவரை பின்தொடர்பவர்கள் (36)

myimamdeen

myimamdeen

இலங்கை
sarabass

sarabass

trichy
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
மேலே