பெரிய விஷேசம்

ஒரு காதல் இறந்து விட்டது ..
இளைப்பாற மடி தேடிய..
தலை கோத விரல்கள் தேடிய ..
உச்சி முகர்ந்து நெற்றியில்..
கன்ன கதுப்புகளில்..
ஒத்தடமாய் உதடு தேடிய...
ஆதரவான.. ஆறுதலான.. வார்த்தைகள் தேடிய..
ஒரு காதல் இறந்து விட்டது..
அது இயற்கை எய்தவில்லை..
அகாலம் அடைந்து விட்டது..
சுபமுகூர்த்த சுபதினத்தில் பெரியோர்களால்
நிச்சயிக்கப்பட்ட அகாலம்...அது
காதல் பிணத்தை மனதிலே புதைத்து..
கதறி அழ கன நேரமும் தனித்திறாத அந்தநாள்..
சிரிக்க சொல்லி சீன்டிய சுற்றத்திற்க்கும் சூழத்திற்க்கும் தெரியுமா என் காதலின் மரணம்..காதலியை மணந்தேன் காதலை இழந்தேன்..

எழுதியவர் : ஆ.சுதந்திரம் (22-Jan-15, 8:25 am)
சேர்த்தது : சுதந்திரம்
பார்வை : 64

மேலே