பெண்கள் குணம் ஆழம் அறியாதது

பெண்கள் குணம் ...ஆழம் அறியாதது ...!!
அன்றைய பொழுது எனக்காகத்தான் புலர்ந்ததா ...??
என்னையே நான் கேட்டுக்கொண்டேன்
புதிதாக பிறந்தவள் போல் என்னருகே குளிர்ச்சியாய் நீ
என்னிடத்தில் உன் நெருக்கம் தந்த இரசாயன மாற்றங்கள்
உன்னை எடுக்கவா இல்லை கோர்க்கவா ...??
தடுமாறிய என் ஆண்மை எனக்கே சவாலாக ...!
மெதுவாக கைகோர்த்தேன்
மெளனமாக சம்மதித்தாள்..
அடுத்து என் பார்வை அவள் இதழ் நோக்கி ...!!
மெதுவாக நகர்ந்தது தலை திருப்பிக் கொண்டாள் ..
புரியவில்லை நான் யாசிப்பது புரியுதாவென்று..!!
கோர்த்த கரங்களுள் மெலிதான சுடு பரவக்கண்டேன் .
என் கரங்கள் அவளை திருப்பியது என்பக்கம் ..
என் கைக்குள் முழுவதுமாக சிக்கிக் கொண்டாள்..!
என் கைசிறைக்குள் சிக்கிய அவளை என்னசெயலாம் ...
அத்தனையும் எனக்கே எனக்காய் ...,
அவள் உடலில் திமிறிய இளமை
அவளுக்கே உரிய அந்த நறுமணம் ...!!
ஆனால் .... எனக்கு பிடித்தது என்னவோ ...
அவள் செவ்இதழ் மட்டுமே ..!
என் ஆண்மையை சுண்டிப்பார்தது...
அவள் பெண்மை ...!
தலை தொட்டு நிமிர்த்திய அவள் வதனம் ...
வெக்கி நின்றாள் ...துவண்டு நின்றாள்...
உடல் நடிங்கியத்தை கண்டு கொண்டேன்
என் ஒரே நோக்கம் அவள் இதழை நோக்கி ...
இதழ் கொண்டு இதழ் மூடினேன்
தலைசாய்த்து என் மடியில் கவிழ்ந்து கொண்டாள்
மெலிதான அழுகை அவளிடத்தில்
துடித்து நின்றேன் காரணம் புரியாது
என் கை சிறைக்குள் சிக்கிய
அவளை மெதுவாக விடுவித்தேன் ..
ஒரு நிலையில் இல்லாமல் தவித்த அவள் பெண்மை
ஏமாற்றம் கண்ட என் ஆண்மை
புரியவில்லை ஒன்று மட்டும் ...
பெண்கள் குணம் ...ஆழம் அறியாதது ...!!