சிக்கி விட்டேன்

ஏ..காற்றே ! காதல் வலையில்
சிக்கி தவிக்கிறேன்
உன் சாவி கொண்டு திறந்து
விடு ...

தனிப் பறவையாய் பறக்க
ஆசைப்படுகிறேன்
என் மனமோ இன்னொரு
பறவையை துணைக்கு
அழைக்கிறது ....

மனதை வெல்ல பலமில்லை
என் மூளை மனதை வெல்ல
துடிக்கிறது ....

மூளையில் காதலுக்கென
ஆராய்ச்சிக் கூடங்கள் திறந்து
விட்டேன் . காதல் சுகமானதா ?
சுமையானதா ?

ஆராய்ச்சியில் பலனில்லை
காதலுக்கு கண்ணில்லை
நான் காதலில் சிக்கி விட்டேன்
சுகமும் சுமையும் சேர்ந்து
என்னை தாக்கியது

என் மூளையின் ஆராய்ச்சிக்
கூடம் மெல்ல திறந்து
இது தான் காதல் என்றது

எழுதியவர் : fasrina (22-Jan-15, 9:14 am)
சேர்த்தது : fasrina
Tanglish : sikki vitten
பார்வை : 84

மேலே