விடியல்
அந்நியனால் அடிமைப்பட்டுக்
கிடந்த நாம் இன்று
அயல்நாடு சென்று சாதிப்பதும் ,,
படிப்பறிவின்றி பாமரனாய்
வாழ்ந்த நாம் இன்று
பார்ப் போற்றும் அறிஞனாய் வாழ்வதும்,,
தலைக்குனிந்து சென்று
தலைவிதியே என்று வாழ்ந்த நாம் இன்று
தரணியில் போற்றப்படுவதும் ,,
சமையலறையை மட்டும்
கண்டுவந்த நம்மகளிர் இன்று
கணினியைக்கைக்குள் வைத்திருப்பதும் ,,
அடுப்பூதும் பெண்ணாய்
அடிமைப்பட்டுக் கிடந்த நம்மகளிர் இன்று
அரசு வேலைப் பார்ப்பதும்,,
சோதனையைக் கண்டு
வேதனையை மட்டுமே பெற்று வந்த நாம் இன்று
சாதனைகள் பல புரிவதும் ,,
அறியாமையை மட்டும்
கண்டு வந்த நம்மகளிர் இன்று
ஆகாயம் சென்று வருவதும் ,,
வாழ்க்கையின் ஓட்டத்தைக் கண்டு ஓடிய
நாம்- இன்று
வெற்றி ஓட்டம் ஓடி பதக்கம் பெறுவதும் விடியலே ...