போய் விட்டாள் என்னவள்

போய் விட்டாள் என்னவள்

எனக்கென்றே பிறந்தவள்
எந்தன் நிழலாக வாழ்ந்தவள்
பெற்றோரும் சுற்றமும் விடுத்து
என்னை கைபிடித்த பூங்கொடியாள்....

இளமையில் விருந்தாகி
முதுமையில் மருந்துமானவள்
தாயில்லா பிள்ளை எந்தன்
தாயுமானவள்....

உலகினை உணரச் செய்தவள்
துன்பத்தில் தாங்கிபிடித்து
தோல்வியில் துணைநின்று
என் தோழியுமானவள்....

மயங்கிய போது மடி தந்தவள்
உணா்வுகளுக்கு பாிசளித்தவள்
என் வாாிசுகளை பெற்றெடுக்க
தன்னுயிரை பணயம் வைத்தவள் ....

இன்பத்திலும் துன்பத்திலும்
என் பிம்பமாய் பயணித்தவள்
தன் இறுதி பயணத்தை தொடா்ந்து விட்டாளே
என்னை தவிக்க விட்டவளாய்.....

இனி எப்படி வாழ்வேன்
என்ன செய்வேன்.....
அவளின்றி என் நொடிகள் ஒவ்வொன்றும்
நெருப்பாய் சுடுகிறதே......

இரவும் பகலும் எனக்கென்றே
வாழ்ந்து உழைத்து
தேய்ந்து ஒடிந்து
உருக்குலைந்து போனவளே

போகையிலே என்னையும் கூட்டிட்டு
போயிருக்கலாமே........
தன்னந்தனியே நின்று புலம்புடா என
பாவி மக விட்டுட்டு போயிவிட்டாள்....

எந்தெந்த வேளைக்கு எத்தனை மாத்திரை
எடுத்து தர யாரு இருக்கா....
தன்னைவிட என்னையே அதிகம் நேசித்தவள்
தனிமையை கற்றுத்தராமல் போனாளே....

பாதி சாமத்துல மூட்டு வலின்னாலும்
பெத்தவளுக்கும் மேல பதறி துடிச்சு
தைலம் தேய்ச்சு விடுவியே....
சிறுபிள்ளையையும் தோற்றுப்போகும்
உந்தன் சுறுசுறுப்பில்...

சம்சாரம் போனாள்
சகலமும் போனது....
உலகம் இருண்டது.
உள்ளமும் சோா்ந்தது

அவளை மட்டும் ஏன் கொண்டு சென்றாய்
இந்த கிழவனை புலம்ப விட்டு
சீக்கிரம் வா மரணமே...
காத்திருக்கிருக்கிறேன் என்னவளை சோ்வதற்காக.....

எழுதியவர் : ஹஸீனா அப்துல் (22-Jan-15, 10:10 am)
பார்வை : 212

மேலே