இன்னும் நான்கு வருடங்கள் இந்த ஆட்சிக்கு இருக்கிறது .அதற்குள் அடுத்த சட்டசபை தேர்தலா ?
சரியோ தவறோ தேர்ந்தெடுத்தாகிவிட்டது . நான்காண்டு ஆண்டு விட்டுப் போகட்டும் .
கலைந்து மறுபடியும் தேர்தல் வந்தால் மக்கள் வரிப்பணத்துக்கு வந்தது கேடு. ஓட்டுக்கு பணத்தை வாரி இறைப்பதில்
ஒருத்தரும் சளைத்தவர்கள் இல்லை .
பட்டியலில் ஏற்கனவே அரசியல் கட்சி அமைத்து பல ஆண்டு காலம் இயங்கிக் கொண்டிருக்கும் மற்றவர்கள்
பெயர்கள் எங்கே ? அதுவல்லவா நடுநிலையான பட்டியல் ?
ஏற்கனவே கட்சி அமைத்திருக்கும் நடிகர் , கட்சி அமைத்துக் கொண்டிருக்கும் நடிகர், இன்னும் கட்சியே
அமைக்காத நடிகர் இவர்கள் பெயருடன் போனால் போகட்டும் என்று அ திமுக வின் எடப்பாடி பழனிச் சாமி
திமுக வின் ஸ்டாலின் நாம் தமிழர் சீமான் பெயர்களையும் பட்டியலில் சேர்த்திருக்கிறீர்கள்
தோளோடு தோளாக நின்று துணை முதல்வராக பணிபுரியும் எங்கள் பன்னீர் செல்வம் எங்கே ? இடைத் தேர்தல்
வென்ற தினகரன் எங்கே ?
நோட்டா NONE OF THE ABOVE --ஒரு வேட்பாளரா ?
நடனமாடுகிறவர்கள் நாடாள வேண்டும் என்ற அரசியல் துணைச் சாசனத்தை யார் எழுதினார்கள் ?
சொல்லுங்கள் அரசியல் சிந்தனைப் பிரிய சகோதரி . 23-Feb-2018 9:22 am
உயரத்தில் ஓரிடமாய் உயிர்வாங்கும் பேய்த்தனமாய்
------ஓசோனில் உள்ளதுபார் ஓட்டை - எந்த
உயரத்தில் இருந்தாலும் உலகத்தை ஒன்றாக்கி
------ஓட்டைக்கு நீபோடு பூட்டை
சேரிகளின் குடிசைகளை மறைத்துவிட்டுப் போகுதுபார்
------தீண்டாமை மேகத்தின் இருட்டு - அதை
சூரியனின் சுடரொளியில் ஒற்றுமையின் நிறம்பூசி
------இன்றோடும் முடியட்டும் விரட்டு
விதியென்று புலம்பிதினம் உழைக்காமல் நீஇருந்தால்
------அனுத்துகளும் அலட்சியமாய்ப் பார்க்க
மனசாட்சி மிகவும் வருத்திய காரணத்தால் என்ன செய்ய வேண்டுமென தெரியாது திகைத்து இந்தக் கேள்வியைத் தொடுக்கிறேன். தமிழ் தாய் வாழ்த்தோ? அல்லது தேசியக் கீதமோ நமது காதுகளில் ஒலித்தால் நாம் அனைவரும் என்ன செய்வோம்? நாம் நம்மை மறந்து மதித்து அசையாது நின்றிடுவோம். அப்படி இருக்கையில் அவ்வாழ்த்துக்கு நாம் அனைவரும் நிற்கையிலே தமக்கொன்றும் சம்பந்தமே இல்லாதுவாறு தானுண்டு தன்வேலை உண்டு என்று நிற்காமல் நடந்து செல்பவர்களைக் கண்டால் என்ன செய்வீர்கள்.....ஆத்திரத்தின் உச்சத்தில் இருப்போம் என்று தெரியும்....அவர்களை என்ன செய்யலாம்....நான் இருக்கும் இடத்தில தினந்தோறும் இந்தப் பிரச்சனை இருக்கிறது தீர
உணர்வு பூர்வமாக சொல்லி தராமல் விட்டதன் விளைவு..
பெரியவர்கள் ஆனபின்னும் தொடர்கிறது என்றே நினைக்கிறேன்..பெற்றோர்களும்,ஆசிரியர்களுமே காரணம்..
கண்டிப்பாக சந்தோஷ் சொன்னதை செய்யலாம்.. பெரியவர்கள் என்றால் அவர்களுக்கு ஏற்றமாதிரி சந்தர்ப்பம் கிடைக்கும் போது புரிய வைக்கலாம்..
15-Nov-2014 1:04 pm
தேசிய கீதத்திற்கு மரியாதை செய்யாதவர்களை கதாநாயகன் கண்டிப்பதாகவோ
அடித்துத் தாக்குவதாகவோ ஒரு திரைப்படத்தில் பாலச்சந்தர் காட்டியிருப்பார் .
இந்த இரண்டும் தேவையில்லை . அவர்களில் சிலரை அழைத்து நாம்
ஏன் மரியாதை செய்ய வேண்டும் என்று பரிந்துரையுங்கள் . மேலும்
சிலர் உணர்ந்து திருந்தலாம் . ஒரு நாட்டின் தேசிய சுதந்திரம் சாத்துவீக
வழியில் சாத்தியமானால் தேசிய உணர்ந்வை புகட்டுவதற்கும் அமைதி
வழியே பொருந்தும் . ஆத்திரம் தேவையில்லை
"தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிப்பீர் நல்லுள்ளங்களே !"
---ஏன் இந்த குற்ற உணர்வு அல்லது அவையடக்கம் இங்கே ?
பாரதியின் பெயர் கொண்டிருக்கிறீர்கள் . சொல்வதை தீர்மானமாக உரைத்து
உரக்கச் சொல்லுங்கள். அதுதான் பாரதி வழி .
மனசாட்சி உறுத்தவில்லையா மனிதர்களே என்று இந்த உணர்வினை
மையமாக வைத்து யாப்பினில் ஒரு கவிதை பதிவு செய்யலாமே !
நற் சிந்தனைக் கேள்வி .வாழ்த்துக்கள் விவேக் பாரதி
-----அன்புடன், கவின் சாரலன்
. 15-Nov-2014 10:44 am
அர்த்தம் புரிந்து அந்த வாழ்த்து பாடலை எவரும் பாடுவதில்லை ,பிறகு அதை பாடி என்ன பிரயோஜனம் .. எங்கள் பள்ளியில் யாரும் அதை அனுபவித்து புரிந்து பாடுவதாக தெரியவில்லை .. எனக்கு தெரிந்த உண்மை சொன்னேன் அவ்வளவுதான் .t. 14-Nov-2014 10:19 pm
நாம் நம் குழந்தைகளை எதை நோக்கி இட்டுசெல்கிறோம் காசுபணம் சேர்க்கும் ஒரு எந்திரமாகவா அல்லது வளமான மனிதநேயமிக்க ஒரு சம நீதி சமுதாயத்த உருவாக்கும் ஒரு அறிவாளியாகவா
ஐயா, எல்லாம் தெரிந்துகொண்டே சும்மா பொழுது போகாமல் கேள்வி கேட்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது...... சமூகம் எப்படி இருந்தாலும், கருவிலே திரு வாய்த்தவர்கள் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் எந்தக் கீழ் நிலையிலிருந்தாலும், எல்லா தடைகளையும் உடைத்து முன்னேறித் தான் சார்ந்த சமூகத்தையும் பல படிகள் உயர்த்திவிட்டே மறைவார்கள். 08-Feb-2014 8:22 am
ஐயா, நாம் பாதியாகத்தான் மதிக்கிறோம்; அவர்களில் சிலர் பாதிக்கும் மேலும் நடந்து கொள்கிறார்கள். நல்ல கேள்வி கேட்டீர்கள் 2014 - இல் வந்து. கனவுலகிலிருந்து விழியுங்கள். 08-Feb-2014 7:48 am
உங்கள் கருத்திலேயே பெண்களை தாழ்த்தி பேசுகிறீர்கள்
"பெரிதும் மதிப்பவன் எப்படி எனில் தாயாக , சகோதரியாக , குழந்தையாக இன்னும் ஒருபடி மேலாக என்னில் பாதியாக "
என்று சொன்னால் நீங்கள் தான் இன்னம் உங்களுக்கு இணையாக பெண்ணை பாக்கும் மனப்பாங்கு அற்றவராக தோன்றுகிறது.....
அவ்வாறாயின் தாயாக , சகோதரியாக , குழந்தையாக இருக்கும் பெண்கள் உங்களில் தாழ்ந்தவரா ? 07-Feb-2014 3:19 am
சகோ. . . தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.கண்ணாடி விற்றவன் தன்முகம் மட்டுமே தெரிய வேண்டும் என்று கண்ணாடி படைப்பதில்லை.யார் பார்க்கிறார்களோ அவர் முகம் தெரிய வேண்டும் என்பது நியதி.மாற்றுக் கருத்துகள் வரவில்லை. உங்கள் கேள்வி இப்போதய சூழ்நிலையில் தேவையா என்பதுதான் இங்கே பதில் கூறியவர்களின் ஆதங்கமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. பல கேள்விகளுக்கு நான் பநில் அளித்துள்ளேன்.நானும் சில கேள்விகளும் கேட்டு உள்ளேன்.ஆனால் நீங்கள் சொன்ன நிபந்தனை உங்களுக்கே சரியாகப் படுகிறதா என மனசாட்சி தொட்டு சொல்லுங்கள்.பெண்களை போகப் பொருள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.நீங்கள் எந்த அர்தத்தில் அப்படி குறிப்பிட்டீர்கள்.சொறிந்து விட்டு பாதியில் விட்ட கதை போல் அல்லவா உங்கள் கேள்விக்கு ஆமாம் சாமி போடாதவர் நிலை ஆகிறது. நீங்கள் கணவன்தான் போகப் பொருள் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது எங்கள் சிந்தனை கூறுகிறது.வேறு அர்த்தத்தில் நீங்கள் குறிப்பிடவும் முடியாது.கூடாது.கணவன் என்றாலும் சரி இல்லை என்றால் விவாகரத்து செய்து மறுமனம் செய்யும் அளவுக்கு பெண்கள் வளர்ந்து தன்னம்பிக்கை கொள்ளும் காலம் இது. அதற்கு இன்னும் ஒரு ஆண்மகன்தான் மனமுவந்து உதவுகிறான். ஒரு கேள்வியை கேட்டீர்கள் சரி.அதற்கு விடையும் உங்களுக்கு தெரிந்து இருந்தால் அந்த கேள்வியே தேவை இல்லையே.கருத்து எப்படி வரினும் நீங்கள் ஒருவர்தான் பெண்ணியத்தின் பிரதிநிதி போலவும் உங்கள் கேள்வக்கு உங்களை பின் பற்றாதவர்கள் எல்லாம் நீங்கள் நினைத்த கருத்துக்கு எதிரி மட்டமல்ல. பெண் இனத்துக்கே எதிரி போல நீங்கள் சித்தரிக்க முயல்வது. இப்போதும் நான் ஏற்கனவே உஙகள் கேள்வி சம்பந்தமாக எத்தனை பதில் கூறி இருந்தேனோ . . அத்தறையும் மீண்டும் தளத்தில் நான் உறுதி பட கூறுகிறேன்.நான் பெண்களுக்கு எதிரி என்றால் 5,2,14 அன்று நான் சமர்ப்பித்த இது வேண்டுமோ இனி நமக்கு.என்ற கவிதையை படித்தும் கருத்து சொல்லட்டும். போதும் சகோ. நாம் ஏதோ பெண்களை வைத்து காமடி பண்ணுவது போல் உள்ளது.இதைத்தான் இந்த பதில்களிலேயே இன்னொரு சகோ இந்த கேள்வியே தேவை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். நன்றி. 07-Feb-2014 1:21 am
போங்கள் நிலா . நீங்கள் பாட்டுக்கு நியாயம் என்று சொல்லி விட்டீர்கள். மீண்டும் இந்த கேள்வி கேள்வியின் அனைத்து பதிலையும் நேரம் இருக்கும் போது படியுங்கள். 07-Feb-2014 12:23 am