காதலர் தினம் - 14

ஐஸ் கிரீம் அவளல்ல
நான்தான்
வெளியே அவளைக்
காணும்போதெல்லாம்
உருகுவதால்
அவளை பார்க்காமல் வீட்டின்
உள்ளே செல்லும்போதெல்லாம்
இருகுவதால்

நிலா அவளல்ல
நான்தான்
களங்கம் என் மனதில் உள்ளதால்
அவளை சுற்றியே என் பாதம் தேய்வதால்

அவளின் கூந்தலல்ல
கார்மேகம்
என் கண்கள்தான்
அவளுக்காக ஏங்கி அழுவதால்

மீன்விழி அவளல்ல
என்விழிதான்
எப்போதும் கண் நீரிலேயே உள்ளதால்

மயில் அவளல்ல நான்தான்
அவளைக்கண்டதும் ஆடுவதால்

மலர் அவளல்ல
நான்தான்
அவளின்றி வாடுவதால்

மான் அவளல்ல நான்தான்
அவள் கண்டதும் துள்ளி ஓடுவதால்

எழுதியவர் : குமார் (15-Feb-18, 10:36 pm)
பார்வை : 292

மேலே