திருந்தாத சென்மம்

அவளின் திருமணம் கேட்டு
அனிச்சை இறந்து போனேன்
அவள் பெயரை
மட்சைகளாய்க் கொண்ட
என் நெஞ்செலும்பில்
நெரிகட்டியது,

யார் அந்தப்.......?
பொண்வண்டை மணந்தப்
புதுவண்டு என
எனக்குள்ளோட்டம்,

வாடிவாசல் வந்து
பயந்து திரும்பிய
காளையா...? , இல்லைப்
பட்டிக்குள்ளே
நெட்டித்தள்ளிய
செம்மறியா...? நான்,

அசுரபலம் எதிர்க்கும்
துப்பிருந்தும்
நான் எப்படி
அதைச் செய்தேன்?,

ஒருவேளை
இதேதான் மற்ற
மாந்திறன் கொண்ட
கட்டிளவான்களின்
காதல் முறிவிற்கும்
காரணமோ...,

சாதி ஒருபக்கம்
புறந்தள்ள
சமயமும் சமூகமும்
நின்று
இலவசமாய்க்
கேளிக்கைக் கொண்டாடும்,

இதனை மிதித்து
வெளியே வந்தப்
புண்ணுக்காரன்கள் எல்லாம்
தன் காதலை
அடிமாட்டு விலைக்கு
மறைவினியோகம் செய்த
காதல் சீமாட்டிகளின்
நலன் தேடி,

தன் மனக்கடவுளிடம்
பிராது கொடுக்கிறான்கள்
திருந்தாத சென்மங்களின்
அடிப்படை
உறுப்பினர்களாய்!

எழுதியவர் : சக்தி கேஷ் (15-Feb-18, 1:34 pm)
சேர்த்தது : சக்தி கேஷ்
பார்வை : 172

மேலே