வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 6

ரோஷனின் மூன்றாம் கவிதை "ஓவியத்தின் குமறல்" ஆகத் துவங்குகிறது.அழகை ஆவணப்படுத்துவதுதான் ஓவியம் எனப் புதுக் கருத்தை முன் வைக்கும் ரோஷன்...வாங்கியவனும், வரைந்தவனும்...ஓவியத்தின் குமுறலை உணராமல்...பாராட்டைப் பங்கிட்டுக் கொள்ளும் பண்பற்ற தன்மையைச் சொல்கிறார். .உடைந்து சிதறும் உணர்வுகளின் வலி,
சட்டங்களுக்குள் மரணித்து விடுகிறது என்கிறார்..
அனாதை இல்லங்களிலும், காப்பகங்களிலும்...
முதியோர் இல்லங்களிலும்...சுவற்றில் மாட்டப் படாத ஓவியங்கள் திரிவதை... இந்தக் கவிதையின் உருவகமாகக் கொண்டால்...மொழியறியாத மௌனங்களின் வலி...நம் வீட்டின் சுவர்களிலும்...
மோதிச் செல்வதை நம்மால் உணர முடியும்.

நான்காம் கவிதை...திருமணம் என்னும் புதிய உறவில்....பழைய உறவுகளை இழந்துவிடக் கூடும் என நினைக்கும் பெண்ணின் பயத்தைக் கவிதையாக்கி இருக்கிறார் ரோஷன். அவளின் விருப்பம் அறியாமல், நிச்சயிக்கப் படும் திருமணத்தில் தான் பலியாடாக மாற்றப்படுவதை உணர்கிறாள் அந்தப் பெண்...காலம் காலமாய் நிலவும் பெண்களின் நிலையை....அழுத்தமாய்ச் சொல்லும் இந்தக் கவிதையை....

இந்தப் புதுப் பயணத்தின் தூரத்தை யாரையாவது
அளவிட்டு சொல்லச் சொல்கிறாள்...அந்தப் பெண்...

எதற்கெனில்...

தன்..."கனவுகளையும், எதிர் பார்ப்புக்களையும்
இங்கேயே புதைத்துவிட்டுப் புறப்படுவதற்கு?"

ரோஷனின் ஐந்தாம் கவிதை...நம் வாழ்வின் மேற் பூச்சு நிறைந்த படடோபங்களைச் சொல்கிறது.
ஒழுங்கற்று...சிக்கல்கள் நிறைந்த வாழ்வைக்..
காலம் மிருகமெனத் துரத்துவதைச் சொல்கிறது . மனிதர்களெல்லாம் "முட்டை வாசி"களாக இருக்கும் இந்த நாட்களை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார் ரோஷன்
தனதிந்தக் கவிதையில்.

மீதமிருக்கும் கவிதைகளைச் சொல்ல மீண்டும் வருவேன்...காலத்தின் பெரும் துணையோடு.

எழுதியவர் : rameshalam (5-Apr-14, 7:44 pm)
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே