எழுத்துகாம் அலுவலகத்திற்கு அகன் மற்றும் கவிஜியின் வருகை

திரு அகன் அய்யா மற்றும் அண்ணன் கவிஜி ஆகிய இருவரும் இன்று எங்கள் நிர்வாக இயக்குனர் திரு. ராஜேஷ்குமார் மற்றும் அலுவலகத்தில் பணி புரியும் அனைவருக்கு ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுத்து விட்டார்கள்.
நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அகன் அய்யா மற்றும் அண்ணன் கவிஜி இருவரும் எந்த ஒரு முன் அறிவிப்பு இல்லாமல் எங்களது அலுவலகத்திற்கு ( hiox ) வருகை தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்கள்..
அவர்கள் இருவரும் அலுவகத்திற்கு வந்து எங்களை சந்தித்து எங்களுடன் உரையாடியது மகிச்சியான தருணம்.
மேலும் ராஜேஷ்குமார் அவர்களுக்கு தமிழ் சேவை விருது கொடுத்து சிறப்பித்து விட்டனர்
புதுவை புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இன்று அகன் அய்யா மற்றும் கவிஜி அண்ணனை இங்கு சந்தித்ததில் மறைந்தது விட்டது..
அகன் அய்யா மற்றும் கவிஜி அண்ணன் ஆகிய இருவர்க்கும் எங்களது அனைவர் சார்பாகவும் ஹயாக்ஸ் (hiox ) சார்பாகவும் மனமார்ந்த நன்றி..
அன்புடன்
தவமணி