சமுதாயமெண்ணும் சரீரம்

உடலினை பேணிடும் முறையினை போலவே
ஊரினை பேணியே காத்திட வேண்டுமே
உடலினை அழித்திடும் கிருமிகள் போலவே
ஊரினை அழித்திடும் கேடுகளை நீக்கு .....

சமுதாய சக்கரம் நன்றாக இயங்க
சரிசம நியாயங்கள் கிடைத்திடும் எவர்க்கும்
நமக்கென்ன என்றிட நன்மைகள் இல்லை
முயன்று பார்ப்பதில் தோல்விகள் இல்லை ........

நாம்வாழும் சமுதாயம் நன்றாக செழிக்க
நன்மைகள் பெருகியே வண்மைகள் நீங்க
ஒவ்வொரு மனிதரும் முயன்றிட வேண்டும்
ஊருக்கு நன்மைகள் செய்திட வேண்டும் .....

கொடும்செயல் கண்டாலே கொத்திட வேண்டும்
குற்றங்கள் பலவற்றை அழித்திட வேண்டும்
சமுதாயம் சீர்பெற முயன்றிடல் வேண்டும்
சமுத்துவ எண்ணமே எவரிடமும் வேண்டும் ......

மனிதனை போற்றிடும் மாண்புகள் வேண்டும்
அவர் நலம் போற்றியே வாழ்ந்திடல் வேண்டும்
ஏற்ற இறக்கங்கள் கலைந்திடல் வேண்டும்
இல்லாத ஏழைக்கு உதவிடல் வேண்டும் ......

மனிதனை பிரித்திடும் மடமையை தவிர்த்து
மனிதநேயம் வளர்ந்திட முயன்றிட வேண்டும்
மனிதமே உலகிலே பெரிதென எண்ணி
மனத்தாலும் தவறுகள் தவிர்த்திட வேண்டும் ....

உயிரினை காத்திடும் உத்திகள் போலவே
ஒழுக்கத்தை எவருமே கற்றிடல் வேண்டும்
நம்மவர் வாழ்ந்திடும் சமுதாயம் அதனை
நல்ல வழியினில் நடத்திடல் வேண்டும் ........

எழுதியவர் : வினாயகமுருகன் (6-Apr-14, 11:06 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 166

மேலே