எழுத்து அறிவித்தவன்எழுத்துகாம்

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள்
கல்லூரியில் படித்து பட்டம் வாங்கினாலும் நாம் படித்த முதல் வகுப்பு பள்ளிக்கூடத்தையும் நமக்கு அரிச்சுவடி கற்று தந்த முதல் வகுப்பு ஆசிரியரையும் காணும் போது நமக்குள் எழும் ஒரு வித உணர்வு.....

புதுவையில் தமிழ் வளர்க்கும் அய்யா அகன் அவர்கள் எழுத்து.காம் இயக்குனர் திரு.ராஜேஷ்குமார் அவர்களுக்கு தமிழ் சேவையாளர் விருது வழங்கிய செய்தியையும் புகைப்படத்தையும் காணும் போது.......

அதே உணர்வு என்னை மெய் சிலிர்க்க வைத்தது.

2012-ம் ஆண்டு காலகட்டத்தில் எழுத்து.காமில் வார்த்தைகளை (சு)வாசிக்க வந்த நான் சுமார் 500 படைப்புகள் ஒருவருட காலத்தில் எழுதிவிட்டேன்

அவைகள் சிறந்த படைப்புகள் என்பதை விட என் எண்ணங்களின் கோழிக் கிண்டல்கள் என் உணர்வுகளின் அலங்கோலப் பிரதிபலிப்புகள் அரிச்சுவடி கற்றுக் கொள்பவனின் கிறுக்கல்கள்

ஆனால்...
அவைகளையும் வீரிய (வி)கவிதைகளாக எண்ணி தங்கள் கருத்துக்களால் உரமிட்டு ஊக்க ஆலோசனையால் நீர் பாய்த்து...... முளையிட தளிரிட மலர்ந்திட கனிந்திட வைத்தார்கள் இந்த எழுத்து.காமும் அதன் எழில்மிகு சக படிப்பாளிகளும் என் நண்பர்களும்

அவர்கள் நிறைய பேர்.....அண்ணன் முரா,அய்யா டாக்டர் கன்னியப்பன்,திருவாளர் எசக்கியேல் காளியப்பன்,புதுவை அய்யா அகன்,நண்பர்கள் நிலா சூரியன்,ஈஸ்வர தனிக்காட்டு ராஜா,முருக பூபதி,பொள்ளாச்சி அபி,சங்கரன் அய்யா,ராம்குமார் கோபால்,முத்து நாடன்,எழுத்து சூறாவளி,சிவபாலன்,வளர்மதி,ரௌத்திரன்,ரமேஷ்லாம்,கே.எஸ்.கலை, ஜெயபாலன்,பிரேம்குமார்,வசந்திமணாளன்,பிரியாராம்,....(விடுபட்ட நண்பர்கள் மன்னிக்கவும்).........

இவர்களுடன் சில நேரங்களில் கருத்து மோதல் ஏற்பட்டதும் உண்டு ஆனால் பல நேரங்களில் முகமறியா நட்பு நெருக்கம் உருவானதுதான் அதிகம்

இடையில் என் வேலைப் பழுவால் இப்போது நான் படைப்புகள் எழுதுவதை குறைத்துக் கொண்டேன் மீண்டும் எழுச்சி கொண்டு எழுத வருவேன் அது எப்போது என்று நானறியேன்

தமிழில் எத்தனையோ வலைதளங்கள் இருந்தாலும் அவைகளில் எழுத்து.காம் வித்தியாசமானது ......புதியவர்களையும் அவர்களது படைப்புகளையும் ஊக்கமுடன் ஆதரிப்பதில் ஈடு இணை இல்லாதது..........

மீண்டும் எழுத்து.காம் இயக்குனர் ராஜேஷ்குமார் அவர்களுக்கு தமிழ் சேவையாளர் விருது வழங்கிய அய்யா அகன் அவர்களுக்கும் இவர்களுக்கு உறுதுணையாக உள்ள எழுத்து.காம் குழுவினருக்கும்...............

எழுத்து.காம் நண்பர்கள்...படைப்பாளிகள் அனைவருக்கும்

வணக்கமுடன் நன்றி..........

இவன்
பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (6-Apr-14, 12:09 pm)
பார்வை : 409

சிறந்த கட்டுரைகள்

மேலே