பிரயாணம் - அவன் - கட்டுரை

பிரயாணம் - அவன் (கட்டுரை)
சுயமிறந்து தீரும்போதும் சிரித்தும் சிரிப்பித்தும்
சுற்றி நின்றவருடைய மனக்கண்ணில் ஒருதுளி
கண்ணீராகியும் மரணத்தின் இருள் குகைக்கு
நடந்துபோன அவன்
வியாதிகளும் மரணபீதிகளுமாக அவன்
முன்னில்வந்தது இன்றும் வேதனையாக
அவனோடு ஆசுவாச வார்த்தைகள்
சொல்லுகின்ற நிறைமனசும்
அவனுக்குவேண்டி
கண்ணீர்சிந்தவுஞ்செய்கின்ற
மற்றொருபாதிமனசுமாக
அவனே இருக்கின்றான்
மற்றயாருங்கேட்டதுபோல் வித்யாசபுத்தியுடன்
வாழ்க்கையை சந்திக்கவும் நேசிக்கவுஞ்செய்கின்ற
விசேஷமனிதனவன்
என்றும் மரணத்தின் முன்பிலே
அறைகூவல் விடுத்தவனும் அவனே
அங்குதான் ஒரு ரோகியாகத்தோன்றாமல்
எல்லாருடைய
அகத்திலுஞ்சேர்ந்திருந்தான்
மரணத்தை வாழ்க்கையின்
ஒரு பாகமாக அவன்
என்றுமே காணமறுத்திருந்தான் ,,,
அவன் இறந்தும் பின் அவனின்
வாழ்க்கையை மறுபக்கத்திலிருந்து அனைவரையுந் திரும்பிப்பார்க்கவேச் செய்திருந்தான்
இறந்துகொண்டிருக்கும்போதும்
வாழ்வின் சொப்பனவர்ணங்களை
சிலரோடு மட்டுமே விதைத்துத்தீர்த்தான்
விதி அவனில் நுழைந்து
செய்யுங்காரியங்களனைத்தையும்
செய்து முடித்தாகிவிட்டிருந்தது
மகாரோகத்தை தழுவிவாழுகின்ற ஜீவியாக
விதிக்கப்பட்டவொரு
துர் அவஸ்த்தை அவனுள்
எரிந்துதீரப்போகிறோம்
என்றறிந்த உறுதிசெய்யப்பட்ட
மீதமுள்ள வாழ்நாட்கள்,,
அவனின் யாத்திரைக்குமுன்பு
ஒரு இடைத்தாவளமானது
கண்முன்பில் மரணம் இருந்தும்
மரணத்தைப் பற்றிய
கனத்த காத்திருப்புகளுக்கிடையில்
எதிர்க்கொள்ளும் முகங்களை
நேர்நோக்கிச் சொல்லிடும்
ஓரிரு வார்த்தைகள்
"பிறக்கின்றபொழுதே
மனிதன் இறக்கவுந்தொடங்கிவிடுகிறான்
என்னுமுண்மை ஒன்றுதான்
வாழ்ந்துவிட்டக்காலங்களை அவன்
தான்வாழ்ந்ததாகவேக் கருதியதில்லை ,,,,
தன்வாழ்நாளின் வாழ்ந்துமுடிந்தகாலங்கள்
இறந்ததாகவேக் கொள்கின்றான்"
குறுநிலை ஜீவிதத்தினிடையில்
தளர்ந்தோடியொளிகின்ற
காலனுடைய க(ரு)றுத்தமுகத்திற்குமுன்னால்
ஆத்மதைரியத்தின் விசாலமாக
இஜ்ஜென்மங் கொண்டிருந்தான்
பிரபஞ்சநிசாரதியின் வர்ணங்களையோ
இல்லை ஏழிசையான சஞ்சமம், ரிஷபம்,
காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம்
நிஷாரம் (ச, ரி, க, ம, ப, த, நி)
எனப்படுகின்றனவைகளை
வரிசைச் சேர்த்திடவோ இல்லை
இப்பிரபஞ்சந்தாண்டிய வேறொரு தேசத்திலிருந்து
காரணமின்றி நடத்திக்கொண்டுவந்து
மீண்டும் உறங்கக் கற்பித்துக்கொடுக்கின்ற
தெய்வத்தினோடுள்ள
ஏதோவொரு தீராவழக்கினோடோ,,
வாசியிருந்தும்
கட்டளைக்கேற்றாற்போல ,,,
காண்பவர் வரிகளில் வாழ்ந்திருந்தான்,,,
ஓர்மைப் புதுப்பித்தலின்
கெடுநாளொன்றின் வாசலில்
ஒரு மனிதனுடைய முகம் நோக்கி
மனசு பாவம் வார்த்தைக்கோப்பு இவற்றின்
எண்ணங்களையறியும்
சுவடுகளின் நிழலின் தொடக்கம்
அவன் புலர்ச்சிகளைத்
தின்றுக்கொண்டே வந்தது
இதயத்தின் எதோவொரு மூலையில்முறிவு ,,
a lovable scratch
மனிதன் அவன் நட்புக்களை
தேர்ந்தெடுக்கத் தெரிந்ததுபோல்
விட்டுப்போன சொந்தங்களை
திருப்பி எடுக்கத்தெரிந்திருந்தால்
என்ற வாக்கிலேயே தனித்திருந்தான்
ஏந்திக்கிடந்ததெல்லாம் மனசின் தேங்கல்
ஏகாந்தத்தில் மற்றயாருமறியாது
தனித்தொலிக்கின்ற தேங்கல்
யாரிடமும் பங்கிட்டு நிற்காமல்
ஆத்மாவின் ஆழத்தில்
எங்கோ அவன் சேர்த்துவைத்திருக்கின்ற
அச்சம்பாத்தியங்கள்
விடைத்தராதுச் சென்ற பிரணயவசந்தத்தின்
நோவும் ஆகுலமுமில்லாத
வேறென்ன இருக்கப்போகிறது ,,
வெக்தமற்ற நரம்புகளில்
மீண்டும் ஜீவரத்தமாகின்ற
அப்பிரணயத்தின் ஷக்திமட்டுந்தான்
அவனை வாழச்செய்கின்றது இன்றெல்லாம்
அழியாமிருதிகளுக்கிடையிலே
வேதனைகளுடைய மகாசமுத்திரத்தை
நீந்திக்கடக்கின்ற அவன்மனம்
அஸ்தமனத்தில் தஞ்சங் கொள்கின்றது
விதியுடைய விரல்நுனிச்சரடில் கட்டப்பட்ட
மணற்பாவங்கள் இம்மனிதப்பிறவிகள்
இப்பாழ்நாடகத்தின் காலங்களை
தீர்மானிக்கின்றக்கைகள்
விதியுடையதுமட்டுந்தான்
ஒவ்வொருத்தருடைய காலம்முடிகின்ற
நேரத்தின் கடையில்
ஒரு இருண்ட குகைக்காணுகிறது
அனைவருமதிலேயேத் திணிக்கப்படுகிறார்கள்
அனுசரன்