அதிகம் கேட்ட வார்த்தைகள் Mano Red

இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலாவது ஒன்று சேருவோம்...!!
பூங்காக்கள் அதிகம் கேட்ட
வார்த்தைகள்...!!

அடுத்த முறை கண்டிப்பாக
நடத்திக் காட்டுவோம்...!!
மேடைகள் அதிகம் கேட்ட
வார்த்தைகள்...!!

கடைசியாக ஒருமுறை
முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்..!!
சுடுகாடுகள் அதிகம் கேட்ட
வார்த்தைகள்...!!

வாழ்ந்தால் இவர்களைப் போல்
வாழ வேண்டும்...!!
ஏழை ஜன்னல்கள் அதிகம் கேட்ட
வார்த்தைகள்...!!

என்ன நடந்தாலும்
நம் நாட்டை திருத்தவே முடியாது...!!
டீக்கடைகள் அதிகம் கேட்ட
வார்த்தைகள்...!!

உங்களை போல் நல்லவர்
உலகத்தில் யாருமில்லை..!!
வட்டிக் கடைகள் அதிகம் கேட்ட
வார்த்தைகள்..!!

இப்போது தான் உங்களை
நினைத்து கொண்டிருந்தேன்...!!
தொலைபேசிகள் அதிகம் கேட்ட
வார்த்தைகள்...!!

எழுதியவர் : மனோ ரெட் (6-Apr-14, 1:24 pm)
பார்வை : 82

மேலே