சிகப்பு கண்ணீர்- Mano Red

பிரதியெடுக்க முடியாத
கடந்த காலத்தின்
ஆயிரமாயிரம் இடைப்பதிவுகள்
இன்னும் நெஞ்சாங்குழியில்
கிடப்பில் கிடக்கின்றன..:-)

குடித்து தீர்ந்து
பின் கழுவாத
தேநீர் கோப்பையில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
காய்ந்த இறுதித் துளி போல
எதிர்பார்ப்புகள் பல என்னிடம்...:-)

தற்செயலாக நடக்கும்
தடுமாற்றம் கூட
என்னைக் காரணம் காட்டி
ஒதுக்கிய போது,
அந்நேர அழுகையை விழுங்கிய
பல சிரிப்புகள் என்னிடம்...:-(

இரவின் அமைதியில்
அத்துமீறி நுழையும்
பேய்க் கனவைப் போல,
என்னை மீறி நடந்த
ஏராளமான விதிகள் என்னிடம்...:-)

நீண்ட ஏமாற்றங்களின்
தொடர் அலை வரிசையில்
நிராகரிக்கப்பட்ட
என் ஆசைகளின்
உயிர்த் துளிகள்
யாருக்கும் தெரியாமல்
ஆங்காங்கே அழுகின்றன
என் சிகப்புக் கண்ணீராக...:-)

எழுதியவர் : மனோ ரெட் (6-Apr-14, 1:29 pm)
பார்வை : 122

மேலே