இதழ்தனை மெல்ல விரித்து

ந தெய்வசிகாமணி
அன்று அலரும் மலரே
ஆதவன்மேல் கொண்ட காதலால்
இதழ்தனை மெல்ல விரித்து
ஈக்களை ஈர்த்திடும் பூவினமே
உறிஞ்சத் தந்திடுவாய் மதுவினையே
ஊருக்கொரு பெயரினைக் கொண்டு
என்றும் வாழ்வினை அழகுடனே
ஏந்திச் செல்லும் மலரல்லவோ
ஐந்துநிலங்களில் மடல்களை விரித்து
ஒப்புயர்வில்லா அழகினை ஈந்து
ஒம்புவார் எந்நாளும் உன்னையே
ஒளஷதம் தேவையில்லா மேலோர்போன்று ....
அ.".தே இனிய வழியென்று
ஆதவனைக் கண்ட மலரினைப்போன்று
அறுதியுடன் நான் உரைக்கின்றேன் இனிமையுடன் .
ந தெய்வசிகாமணி