சீதனம்

அவள் பெயர் சாந்தி
பெயருக்கேற்ற சாந்தம்
முகந்தில் மகாலட்சுமி
அவள் வீட்டில் இல்லை மகாலட்சுமி
வயதோ இருபத்தெட்டை தொடுகிறது
சாதகத்திலும் எட்டு.

சாந்திக்கு மாப்பிளை பாக்கினமாம்
எத்தினயாவதம் இது ?
உணர்ச்சியற்ற ஊர் பெண்டீர் பேச்சு.

இறை குடி கொள்ளும் சிறிய வீடு
நாகரீக பொருளற்ற
ஓலை பாய் அவள் வீட்டு நாட்காலி.

பெண் பார்க்க ஒரு கூட்டம்
அவள் வீடு நாடுகிறது
அமைச்சருக்கு வரவேற்பு போல்
மாப்பிளைக்கு வரவேற்பு பயத்துடன்.

மாப்பிள்ளை நடுவே கம்பீரத்துடன்
ஏலம் போடுவதற்கு தயார்
வீடு வாங்க வந்தவர் போல் - தகப்பனார்
பெறுமதி கணக்கெடுப்பு .

பெண்ணை கூப்பிடுங்கள் ............
சபையில் ஒருவர்
கையில் தேநீர் தயக்கத்துடன்
அவள் நடை அவளுக்கு புதிதல்ல
அவள் மாப்பிள்ளையை நிமிர்ந்தும்
பார்கவில்லை முடிவு அவள் அறிவாள்.

சாந்தி அமைதியாக அமருகிறாள்
மாப்பிளைக்கு பெண்ணை பிடித்திருக்காம்
அவள் முகத்தில் மாற்றம் இல்லை
விடயத்துக்கு வருவோம் மணமகன் தந்தை

பொண்ணுக்கு எத்தின பவுன்
எமக்கில்லை உங்க பொண்ணுக்கு
அவரின் பெரிந்தன்மை
ஒரு மோட்டார் சைக்கிள் மகனுக்கில்லை
கோவில் குளம் பெண் போவதற்கு
வங்கியில் ஒரு தொகை
உங்க பொண்ணுக்கு உதவும்
மூச்சு விடாமல் பேசியதால்
பலகாரத்தட்டில் கண் வைக்கிறார்
மணமகன் தந்தை .

பெண் வீட்டார் பக்கம்
ஓர் அமைதி நிலவுகிறது
சாந்தி நிதானமாக எழுந்து
மணமகனின் வீட்டாரை நோக்கி
மாப்பிள்ளைக்கு கண் தான்
தெரியவில்லை என நினைத்தேன்
இதயத்திலும் நோய் இருக்கிறது
முதலில் சரி செய்யுங்கள்

எழுதியவர் : அன்புடன் விஜய் (23-Feb-11, 10:37 pm)
பார்வை : 733

மேலே