முகம்

மாய்க்க மாய்க்க
முகம் முழுவதும்
அந்த கொப்புளங்கள்
வெடித்து சிதைந்து
இறந்த நினைவுகளோடு
இரத்தம் கலந்து சுவடுகளாய்
நிற்காமல் வடிகிறது !

வெளியில் வர பயம்
எவனோ ஒருவன் பார்ப்பான்
எப்படி என்று கேட்கலாம் ?
என்னவென்று சொல்ல !

கைகளும் சிலநேரம்
நரம்புகள் சிரிக்க வியர்க்கும்.
பார்வை பல நேரம்
பார்த்தது புரியாமல் விழிக்கும்.
கால்கள் தேய்ந்து போயதாய்
காலணிகள் பறை சாற்றும்.

பேசுவதாய் வாய் திறந்து
வெறும் சப்தம் மட்டும் வெளிவரும்.
கண்களில் காணும் மௌனம்
காது வழி இரைச்சலாகும்.
அவள் வரும்முன்
அந்த கொப்புளங்கள்
என்னை முகமற்ற மனிதனாய்
முன்னிறுத்தும் காயங்களோடு !

காதல் மிக கொடிய நோய்
காதலன் பரிதாபமான விலங்கு
இங்கே மனிதன் வெளியே
இலக்குகள் இல்லா எல்லாம் உள்ளே !

எழுதியவர் : கர்ச்சாகின் (7-Apr-14, 10:14 pm)
சேர்த்தது : GOVINDAN MANIKANDAN
Tanglish : mukam
பார்வை : 67

மேலே