சும்மா பா

சிலைகளின் தலைகள் சுத்தம்.
அலைப்பேசி கோபுரத்தில்
கருவறுக்கப்படும் காகங்கள்.


***************************************


மேகம் பருவம் அடையாது
பூமியின் கர்ப்பபை மலடாகும்
மரம் வெட்டப்படுகிறது

------------------------------------------------

அண்ணாந்து பார்த்தான் குடிமகன்
அண்ணா கொள்கை பறக்கிறது
ஹெலிகாப்டரில் முதல்வர்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (8-Apr-14, 1:02 pm)
Tanglish : summa baa
பார்வை : 223

மேலே