நானும் கவிஞன்

நானும் மொழி பெயர்ப்பாளர் தான்
உன் விழியின் மொழியை
நான் புரிந்துகொள்ளும்போது...

நானும் வெற்றி பெற்றவன் தான்
உன் காதலை உன் புன்னகையில்
கண்டுபிடிக்கும் போது....

நானும் கவிஞன் தான்
உன்னை பற்றி
கிறுக்கும் போது....

நானும் இதயமுள்ளவன் தான்
உனக்காக
துடிக்கும் போது....

நானும் அழகானவன் தான்
நீ என்னையே கண்ணிமைக்காமல்
பார்க்கும் போது....

நானும் குழந்தை தான்
நீ
மழலைகளிடம் பேசும் போது.....

நானும் சிந்தனையாளன் தான்
நீ என்னை பார்க்காமல் போனதை எண்ணி
சிந்திக்கும் போது...

நானும் காதலில் விழுந்தவன் தான்
நீ என்னை
ஒர பார்வையில் பார்க்கும்போது...

நானும் வேகமானவன் தான்
உன்னை பார்க்க
வேகமாய் செல்லும் போது...

நானும் ஏமாளி தான்
நீ என்னை
காதலிப்பதாக ஏமாற்றும் போது...

நானும் ஒரு கவிதை
எழுதிவிட்டேன்
இப்படியாக கிறுக்கி முடிக்கும் போது....

எழுதியவர் : கிளிப்போர்டு குமார் (8-Apr-14, 7:01 pm)
Tanglish : naanum kavingan
பார்வை : 153

மேலே